கிழவன் காதல்

உன் கருப்பு கண்ணால

என்ன கட்டி போட்டவளே

மாமன் வாரேன் மல்லிகை தாரேன்

தலையில வச்சிகிட்டு

என்ன கட்டிக்காம போறியே

நித்தம் உன் நெனப்பு

நெஞ்சல உற - அடி

காத்தடிச்சா ஆடா ஆலமரம் போல

உன் நெனப்பு விழுது நெஞ்சிகுள்ள விழுதாய்

ஒத்தையில நீயும் போனா

என் மனசு குளிருமா?

ஊர் என்ன சொன்னாலும்...

உன் கூடயே நா வாரேன்

கை புடிச்சி கூட்டிகிட்டு போ

அடி ரட்டை சடை வெண்ணிலா

உன் கூந்தல் மடிப்பில

ஒத்த ரோசா வச்சி

உன் அழக நான் ரசிப்பேனேடி

அடி வாடா மல்லியே

ஆள தின்னும் கள்ளியே

மச்சான் மனசுல இருக்கும் உன் நெனப்ப

எண்டி?,வாட்ட நெனைக்கிற


உன் பார்த்த நேரம் நெனவுல வந்தா

நெஞ்சிகுள்ள ஏதோ பட்டாம் பூச்சி பறக்க

ஒத்தையில தெரியும் மான போல ஆட்டம் போடுறேனடி

உனக்காக இன்னொரு நிமிசம் சேர்த்து வாழுறேன்

உன் தொண்ட குழியில விக்கி நின்ன வார்த்தைய

நீ கத்தி சொல்லி போ புள்ள-போனா

மகுடிக்கு ஆடும் பாம்ப போல

மச்சான் உன்னையே சுத்துவேன்

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (26-Jun-16, 8:02 pm)
Tanglish : kizhavan kaadhal
பார்வை : 360

மேலே