தூங்கினான்

தூங்கினான் தூக்கம் வராமல்
கண் மூடி அசைவில்லாமல் .
மணவறை மறந்தான்
அசதியிலே!


பெண்ணின் மனத்தை
தொடாமல் உடுருவினான்
மயங்கினாள் மாது
நினைவில்லாமல்.

அவன் தந்தையோ
அள்ளி வீசினான்
சொற்களை.

தாயோ மெச்சினாள்
மகனின் அறிவை.

பெரிய தகப்பனோ
கூவினான் அதிகமாக

கோடியில் புரள்கிறேன்
ஆள் பலம் அதிகமாக.
எனக்கு என்று.

வாங்கினார்கள்
யாவரும் மிகவாக
ஏச்சும் பேச்சும்
அடியும்!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Jun-16, 9:04 pm)
பார்வை : 2000

மேலே