காதலின் மெல்லிய சலனமோ

விழியோரத்தில் நீலம்
----அது நைல் நதியோ
இதழோரத்தில் இனிமை
----அது தமிழ் மொழியோ
முகம் முழுதும் நிலவொளி
___அது காதலின் மெல்லிய சலனமோ
நெஞ்ச நதி தீரத்தில்
----அது சிந்து பாடுதோ ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (2-Jul-16, 9:57 am)
பார்வை : 93

மேலே