சுயநலப் பேய்கள்
பொண்ணுங்க ரொம்ப பாவங்க
என்றைக்கு தீரும் இந்த சோகங்க
காதலும் காமமும் உயிரைக் குடிக்குதே
கழுத்தை பாச கயிறால் இறுக்குதே
மனித வடிவிலே சில மிருகங்கள் அலையுதே
மலரும் பூக்களை கசக்கி எறியுதே
எங்கிருந்தாலும் வாழ்க என்பது தான் காதல்
எனக்கில்லையென்றால் யாருக்குமில்லையென கொல்வதா காதல்
சுயநல பேய்களாய் மக்கள் ஆனதேன்
சொந்தமில்லையேல் காக்க மறுப்பதேன்
நரம்பில்ல நாக்குகள் கண்டதை பேசுது
காக்கும் கரங்கள் கையை விரிக்குது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது மிருகமே
இது ஆறறிவு கொண்ட மனிதனின் செயலா?
எதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் மக்கள் கூட்டம்
அழிவை நோக்கி செல்லுது நாளும்
மனித குலமே திருந்தி விடு
உன்னால் இயன்றதை செய்து விடு
மரணம் நெருங்கும் எக்கணமும்
மனிதனாய் வாழு அது வரையும்