காதல் கபடம்

ஏதோ ஒருசில எதிர்பார்ப்புகளின்-
ஏகாந்த ஆசைகளின் தீர்வு தீவாய் -
காலத்திற்கும் காதல் ...................

மனிதனின் மடமையின்
அதிகபட்ச உச்சத்தின் விளைவுகளால்
ஏமாற்றமென்னும் வெகுமதி ...........

எத்தனையோ தோல்வி காயங்களின்
வலிகளை உணர்ந்த பின்னும்
இதுவாவது உண்மையாகும் என்று
நம்பி சாகிறது காதல் நம்பிக்கை .............

தனக்கான வாழ்க்கையை மறந்துவிட்டு
துணைக்கான தேடலில்
எதிர்காலம் தொலைவதனை
ஏற்க மறுக்கிறது இளசு நெஞ்சங்கள் ..............

அவஸ்தையும் அழுகையும் கூட
இதமான இன்பமாகவே
இயல்பாய் எடுத்துக்கொள்கிறது
ஏமாந்த மனங்கள் கூட ............

சுயநலத்தின் சூழ்ச்சிதான்
காதல்வலை என்று
கடைசிக்கட்டத்திலே கண்ணீர் உதிர்க்கிறது
உண்மைக்காதல் ..............

காலத்திற்கும் தோற்பது என்பது
உண்மைக்காதல்தான் -
இருந்தாலும் காதலை கபடமே
தோற்கடிக்கிறது !

எழுதியவர் : விநாயகமுருகன் (3-Jul-16, 11:22 am)
Tanglish : kaadhal kabadam
பார்வை : 87

மேலே