ஸ்பரிசம்

சந்தனத்தை குழைத்து பூசிய
முகமோ
பொய்கை அவள் மேனியோ
தொட்டவுடன் சிலிர்க்கிறதே
சவ்வாது அவள் விரலே
காட்டாறு
போல்
எங்கெங்கோ
சொல்ல முடியா
இடமெல்லாம்
பாய்கிறதே
அமுது அவள் ஸ்பரிசம்
என் தேகம்
அவள் தேசத்தில்
மூழ்கட்டும்
ஆடைகள்
இன்றி
குழலே
ஆலிலை கண்ணன்
நான் பார்க்க
நீ வெட்கப்பட்டு
எனை கட்டிக்கொண்டாய்
உடையாய்
உயிரே
மோகக் கழல்
எரியும் நேரம்
ஆசைக் கடல்
அலையடிக்கும்
ஆள் அரவம்
இல்லா உலகில்
வெள்ளை தேரில்
வான் வீதியில்
நாம் மிதப்போம்
நிலவை எட்டி பிடிப்போம்
விண்மீன் எடுத்தே
ஆடை உடுத்திக்கொள்வோம்
கோவை கனி
உன் உதடு
கோர்த்துக் கொள்வோம் வா
நான் தொடும் வேளை
உன் கண்ணில்
ஆயிரம் சாரல் வீசுகிறதடி
மனம் குளிர்கிறதடி
ஆனால் தேகம் சுடுகிறதடி
காரணம் நீ அறிவாயடி
என் கமலமே
பனிதுளி எனை
சுமக்கிறாய்
உன் குளிர் மேனியில் (அதனாலடி)
~ பிரபாவதி வீரமுத்து