இப்புவி ஏது

பரமனை மறந்திடும்
பாமரனையும்
மறக்காது
தாயுள்ளம்

பெற்றபொழுதில்
பூத்து மகிழும்
பொத்திவச்ச
நெஞ்சமது

அன்பும் பரிவும்
பாசமும்
நிறைந்து காண்பவள்
அன்னைமட்டும் தான்

காப்பவனுக்கும்
காவலுண்டு
பெற்ற சிசுவுக்கோ
அனைத்தும் அவளே!

முற்றும் துறந்த
துறவிகளும்
துறக்காத உறவு—பெற்ற
தாயின் உறவு

துறவி காலில்
தந்தை விழுவதுண்டு
தாயின் காலில்
துறவி விழுவது நியதி

தாய்க்கு தரும்
உயர் மதிப்பு அது
தாயில்லையேல்
இப்புவி ஏது?

எழுதியவர் : கோ. கணபதி. (3-Jul-16, 5:52 pm)
Tanglish : ippuvi aethu
பார்வை : 53

மேலே