நேற்று , இன்று , நாளை ,,,,,,,
நேற்று
கவி எழுத முயன்றேன்
முயன்று தோற்கிறேன்
தலைப்பு மட்டும் வரைந்து விட்டேன்
களவாடிய பொழுதுகள் ,,,,
இன்று
நிச்சயம் முடித்து விடுவேன்
என்றே விடிகிறது
காலை கனவுகள்
முடிந்து
களிப்புடன் எழுத
அமர்கிறேன் ,,,
என்னவளே !
தொடக்கம் சரியோ ,,,,
யோசனையில் கழிய
குழப்ப களத்தில்
சண்டையிட்டு கொள்கின்றன
உந்தன் நினைவலைகள் ,,,,,,,
நேரம் கடக்க
நாளை
என்றொரு நாள்
கண்முன் விரிகிறது
முயன்று முடித்து விடுவேன்
சொல்லி கொள்கிறது
விடலை மனசு ,,,,!

