நான் - மனிதன்
நூறு ஸ்வாதி கொலையுண்டாலும்
நூறு நிருபயா கற்பிழந்தாலும்
நான் - என் குடும்பம்
நான் - மனிதன்
விபத்துக்கள் நடந்தாலும்
விபரீதங்கள் நிகழ்ந்தாலும்
எனக்காகும் வரை - செய்திகள்
நான் - மனிதன்
சில மணி பொழுதுகளில்
பொங்கி எழும் அலையாய் - என் கோபங்கள்
சில நொடி பொழுதுகளில்
மறைந்து விடுகின்றன - கரை சேரும் நுரையாய்
நான் - மனிதன்
அறிவியல் ஏமாற்றங்கள்,
அழிவின் ஏற்றங்கள்,
அகால மரணங்கள்,
அநியாய சம்பவங்களும்,
எத்துனை முறை
நடந்தாலும்,
எத்தனை முறை
தொடர்ந்தாலும்,
என் முக தோற்றத்தில்
எழும் உணர்வுகள்
முக நூலில் பதிவு செய்யப்படும்
முடிவில் -
நான் - மனிதன்....