தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 49 - = 155
மாதங்கள் பனிரெண்டில்
மனம் விரும்பும் மாதம்
மார்கழி மாதம்
பனிமழை தூவும் !
தேகம் முழுதும் நடுநடுங்கும்
சூரியன் வந்தால் குளிர் அடங்கும் !”
பூ பூக்கும் நேரம்
நான் பார்க்க வேண்டும்
பூத்ததுமே
தேனருந்த வேண்டும் !
போன ஜென்மத்தில்
பொன்வண்டு நீயோ ?
அந்த நினப்பில்
இன்னும் இருக்கிறாயோ ?
முந்தைய ஜென்மத்தை
யாரறிவார் கண்ணே !
முந்தானை மோகம் வந்தாலே
தேனருந்தச் சொல்லும் தன்னாலே
மனித இனத்துக்கு
தேனெடுக்கும் நுட்பத்தை
கற்றுத் தந்தது
தும்பியினத்து வண்டினம் !
அதிலில்லை சந்தேகம் !
நீ சொல்வது சரியாகும் !
பாலைவன ரோஜா பருவக் கோளாரால்
பாலையைப்போல வாடுகிறாள் !
வாடும் ரோஜாவுக்கு நீரூற்றும் ராஜாவே
உன் ஈகை குணத்துக்கு ஈடில்லை ராசாவே
மனிதராய்ப் பிறந்தோம் மனிதனாய் வாழ்வோம்
நற்குணம்தான் மனிதனை குஷி படுத்தும் !