எண்ணத்தில் துளிர்த்தவை 13

ஆராவரமில்லா சாலை
அரவமற்ற சூழ்நிலை
அமைதியின் வாயில் !

வெறியில்லா மனம்
நேசமுள்ள நெஞ்சம்
நட்புக்கு வழி !

பகையில்லா நிலை
பண்புள்ள உள்ளம்
உறவில் வலிமை !

புறம்பேசுவது தவிர்த்தல்
அறநெறிகள் காத்தல்
உள்ளங்கள் தூய்மை !

உதவிடும் நெஞ்சம்
உள்ளத்தில் தெளிவு
உள்ளங்கள் மகிழ்ச்சி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Jul-16, 2:41 pm)
பார்வை : 183

மேலே