காதலுக்கு கவி
(காதலை பிடித்து இழுத்து வைப்பது ஒரு காடு என்ற நம்பிக்கையில் வந்த காதலர்களின் காடுகளின்,காதலின் அனுபவங்கள்!
அவர்களை பொறுத்தவரை
காதலின் ஆழத்தில் காடுகளோ வனயீர்ப்பு)
இரவுகளின் இருட்டடியில்
வெளிச்சமாக நகர்கின்றோம்!
இருள்வந்து சூழ்ந்தபோதும்
பயணத்தை தொடர்கின்றோம்!!
ஆங்காங்கே மலையடியில்
குடிபுகுந்து கொள்கின்றோம்!
அமைதிகள் புலப்படவே
குன்றுகளில் நிற்கின்றோம்!!
பாம்புகளோ பல்லிகளோ
பசியடக்க வந்துவிடும்!
பாதிபொழுது மூளை
காமத்தை கையிலெடும்!!
காதலெனும் ஒளிக்கதிர்கள்
காட்டுக்குள் வரவேற்பு!
காதலின் ஆழத்தில்
காடுகளோ வனயீர்ப்பு!
மனதோரம் நினைவலைகள்
மங்காமல் ஒளிவீசும்!
மாலைநேர தென்றலும்
நினைவுகளை தாலாட்டும்
செயற்க்கையின் சப்தத்தை
சிறுசிறுசாய் இழந்து
இயற்க்கையின் மடிக்கு
சிறகாகினோம் விரிந்து!
ஞாபகங்கள் மூளைக்குள்
கண்ணீரை தந்துபோகும்!
ஞானத்தால் சிந்தித்தால்
காயங்களும் ஆறிப்போகும்!
கவிகொண்டு வெண்ணிலவை
கடன்வாங்க துடிக்குதடி!
மனமென்ற உன்னுயிரோ
காதல்கொண்டு நிற்குதடி!
எனக்குள்ளே ஒளிந்துகொள்ளும்
ரகசியத்தை எங்குகற்றாய்?
எனக்குள்ளே குடியிருந்த
அனுபவத்தை வந்துசொல்லாய்!
பகல்கதிரோ காதலை
கவிகொண்டு எழுப்புமடி!
காதலோ நிலாகதிரால்
கானம்கேட்டு உறங்குமடி!
இதயமென்ற நதிகளிலே
காதல்படகு ஓயாது!
காடுதாண்டி சென்றாலும்
காதல்காற்று மாறாது!!
ஜீவனை வளர்ப்பிக்கும்
அதிசயமே காதல்தான்!
காதலே இல்லையென்றால்
ஜீவனே கற்கள்தான்!!