யார் நீ

யார் நீ
யாரும் பார்க்கும் முன்
எனை தீண்டி விட்டு பறந்து சென்ற
பட்டாம் பூச்சியா...
யார் நீ
தூரத்தில் நீ வரும் போது
கண்கள் இரண்டும் கூசுதே
யார் நீ...
கோடி மின்னல்களை
ஒருங்கே கொண்ட
உன் பார்வை எனை தாக்குதே
யார் நீ...
வண்ண வண்ண ஆடை
உடுத்தாத வானவில் நீயா
யார் நீ....
என் மௌனங்களில்
புதைந்திருந்த
மரபு கவிதையா
யார் நீ...
பேண்ட் சட்டை
போட்ட ராமனும் நீயா...
யார் நீ...
இரு சக்கரவாகனத்தில்
நீ வரும் போது
ரோட்டில் இறங்கும்
அழகர் நீயா...
யார் நீ...
என் வீடு கடந்து செல்கையில்
பார்வை கணைகளைத்
தொடுத்து செல்லும் யார் நீ...
கண்ணாடி காணமல் இருக்கும் கண்கள்
உனை காணும் போது
ஆயிரம் முறை பார்த்ததன் அவசியம் என்ன...
யார் நீ....
ஏல்லோரிடத்திலும் புன்னகை
வீசி செல்லும் நீ
எனை மட்டும் கண்ணீர்
வார்க்க வைத்தது ஏன்
யார் நீ...
சாலை கடந்து செல்லும்
உன் கால்கள் இரண்டும்
விரைவு பேருந்தா ...
யார் நீ....
என் மனதில் தோன்றும்
எண்ணங்களை பிரதிபலிக்கும்
யார் நீ....
நான் என்பதன்
அனைத்து அர்த்தஙகள்
அகப்படும் அகாராதி நீ....

எழுதியவர் : கிரிஜா.தி (6-Jul-16, 9:38 pm)
Tanglish : yaar nee
பார்வை : 406

மேலே