பொது நல விரும்பிகள்

பகட்டாய் பேசுகிறார்
பல்லிளிக்க பேசுகிறார்
புதுசுயென்றே பேசுகிறார்
பொது நல விரும்பியாகிறார்..!

பாலபிஷேகம் செய்கிறார்கள்
பச்சை குத்திக்கொள்கிறார்கள்
மன்றமென்று ஒன்றை வைத்துக்கொண்டு
மக்கள் மந்தையையும் மடமையாக்குகிறார்கள்..!

நல்லதென்று அவ்வப்பொழுது சில செய்கின்றனர்
ரத்த தானம் பண உதவி என்றெல்லாம் நன்று தான்
அதற்கு நாக்கூசாமல் தம்பட்டம் அடிக்கின்றனர்
தானே செலவு செய்து விளம்பரம் தேடுகின்றனர்

அத்தோடு சரி அவரவர் வாழ்க்கையில் அமிழ்கின்றனர்
புத்தன் காந்தி ஏசு இப்படி இருக்கவில்லையே
பொது நலம் வேண்டி புது ஜென்மம் எடுத்தனர்
தியாகமென்றால் அதில் எந்த கலப்புமின்றி முழு நலம் மட்டுமே.

தூறல்களாய் தூவிவிட்டு தொலைந்து போகும் சருகுகள்
பாமரனுக்குள் நம்பிக்கையை விதைத்து விட்டு
தொலைவது தொடர்ந்து நடக்கிறது

அவர்களை படர்ந்து இவர்களும் பிச்சை புகிய
இதுவா நான்மறை கூறும் நல்லுலகம்?

சுயநலம் மட்டுமே இங்கே வேரூன்றி போனது
சுயம் என்கின்ற அடையாளமாய் கட்சி கழகம் அமைப்பு
இலவசங்களை எறிந்து விட்டு எகத்தாளமாய் அரசியல்
பணங்கொண்டவன் குணங்கொண்டவனாய் இருப்பது
எக்காலம் பாருக்கு தெரியும்படி பதிவு செய்யுங்கள்.!

நீயாரென்று யாரையும் வினவாது கேளுங்கள் உங்களிடமே
நீங்கள் கூட இன்னுமொரு புத்தனாகலாம்,
ஒரு ஏசுவுடன் உலகமே கிறிஸ்து மயமாகுமென்றால்
பிரசங்கங்கள் எல்லாம் அதிகப்பிரங்கங்கள் தானே

பேசுவதை விடுத்து பெரிதாக ஏதேனும் செய்யுங்கள்
ஏசு செய்ததில் ஏதாவது ஒரு சதவிகிதம் முடிகின்றதாவென்று
இஸ்லாமில் வரையறை சொன்னார் நபிகள் நாயகம்
அந்தப்போர்வையில் இங்கே எத்தனை வன்முறை வெட்கமில்லை

கீதை சொன்னான் கிருஷ்ணன் ஆசை துற என்றான் புத்தன்
கேட்டோம் கேட்கிறோம் கேட்டுக்கொண்டு தானா இன்னும் இனியும்
தயை கூர்ந்து செய்யுங்கள் எளியவர் ஏழை நம்மில் எத்தனை பேர்
ஏற்றம் பெற வேண்டியது நீங்கள் மட்டுமல்ல எல்லோருமே..!!

எழுதியவர் : செல்வமணி (7-Jul-16, 10:34 am)
பார்வை : 158

மேலே