மனக்குமுறல்

நொடிக்கொரு வேடந்தரிக்கும்
வேடதாரிகளுக்கிடையில்!
வேள்வித்தீயில் வேகும்
வேற்றுக்கிரகவாசியாய்! இந்த
வெள்ளை மனம்!!!

நல்லதென லாடம் ஏற்றப்பட்ட மனதில்!
நடிப்பு பாடம் ஏறமறுக்கிறது!
உள்ளதென தான் உரைத்தாலும்,
உத்தமம் ஊசலாடுகிறது பொய்யின்
விளிம்பில்!!!

சாறுகளை பிழிந்து சாக்கடையில்,
வீசியெறியப்படும் சக்கையாய்!
உதவிய உள்ளம் ஊனமாய்...
பரிதவிக்குது இங்கே!!!

இறக்க உரையோடு இணைந்த
இதயத்தில், சுரக்க சுரக்க பசுமடியாய்!
சுரந்த பின்பு விழுகிறது! பல
நம்பிக்கைத் துரோககங்கள் சவுக்கடியாய்!!!

எறும்புகளுக்கு தீங்கிழைக்காத
இதயத்தை! முட்படுகையில் படர்த்தி
அடிஅடியாய் இடியை இறக்க!
இன்முகம் பல பிறக்குது இங்கே!

விலைமதிப்பற்ற அரிதான மனிதநேயத்தில்!
விதைக்கப்படுகிறது அளவற்ற,
மரணகாயங்கள்! விலைமலிந்த பல
அரக்க மனங்களால்!!!

நடைமுறையில் சில,
நல்லெண்ணங்கள்!
கருவில்லாமல் கலகலப்பூட்டும்,
நகைசுவையாகிறது இங்கே!

தர்மத்தின் வழிநடத்த நெஞ்சில்!
ஓய மறுக்கிறது! இரத்தக்கண்ணீரின்...
ஒப்பாரிகள்!!!

குற்றமில்லா மனதில்! குற்றப்பத்திரிக்கை...
அச்சிடும் அலுவலகம்!
தடாலடியாக நிறுவப்படுகிறது இங்கே!!!

பொறுமையோடு பொதுநலம்,
காத்த மனதிற்கு!
ஆறடி குழிதோண்டி அடக்கம் செய்ய!
வெட்டியானாய் காத்துக்கிடக்கிறது!
பல சுயநல மயானங்கள்!!!

தெய்வம் நின்று கொள்ளுமோ!
இல்லையோ!
நல்லதொன்றை நிறுத்திய...
என் மனமானது நிற்காமல் நித்தமும்...
கொலைப்படுகிறது இங்கே!!!

எழுதியவர் : Maniaraa (7-Jul-16, 10:53 am)
பார்வை : 437

மேலே