குச்சி அனுப்பறியா, குச்சி அனுப்பறியா குச்சி அனுப்பறியா
@@@##@@@@
என்னங்க பாட்டி வாசப்படில்ல நின்னுட்டு நீதிமன்றத்தில வழக்கு சம்பந்தப்பட்ட ஒருத்தரோட பேரு மூணு தடவ கூப்படற மாதிரி "குச்சி அனுப்பறா"ன்னு யாரக் கூப்பிட்டீங்க? யாரு குச்சி அனுப்பறாங்க? அது என்ன குச்சி?
@@@@@
வாடி கண்ணு பொற்கொடி. நாங் கையில பிடிச்சு ஊனி நடக்கற குச்சியைக் காணோம்.
###
பாட்டிம்மா நா உங்க பக்கத்தூட்டுக்காரி. உங்க நெருங்கன சொந்தம். என்னக் கூப்புட்டு இருந்தா நா வந்து உங்க குச்சியத் தேடி எடுத்துக் குடுத்திருப்பனே!
@@#
நா எல்லா எடத்திலயும் தேடிப்பாத்தன்டி பொற்கொடி. எம் பேத்திங்க ரண்டு பேரும் பொல்லாத குறும்புக்காரிங்க. என்னோட குச்சிய எடுத்துட்டு வெளையாடப் போயிருப்பாங்க. அவுங்கத்தா நா அர மணி நேரமா தொண்டத் தண்ணீ தீய கத்திக் கத்திக் கூப்புட்டேன்.
#@@@@@@
ஓ....அப்பிடியா?
உங்க பேத்திங்களத் தா "அனுப்பறயா, குச்சி"ன்னு கூப்பிட்டீங்களா? பாட்டி அவுங்க பேரு அனுப்ரியா, குஷி. நீங்கதா அவுங்க பேரச் சரியாச் சொல்லறதில்ல.
@#@
ஏண்டியம்மா பொற்கொடி நம்ம தமிழ் பேரா இருந்தா நாஞ் சரியாச் சொல்லுவன். எம் மவனும் மருமகளும் படிச்சு பட்டம் வாங்கி பெரிய வேலைல இருந்தாலும் அவுங்களப் பிடிச்ச சினிமா பைத்தியம் அவுங்கள உட்டு போய்த் தொலைய மாட்டங்குதே! சினிமாவ்லே வர்ற பேரையெல்லாம் பெத்த பிள்ளைங்களுக்கு வைக்கற பைத்தியகாங்க அவுங்க ரண்டு பேரையும் யாருடி மாத்தமுடியும்?
@#@
பாட்டி, இப்பெல்லாம் நூத்துக்கு தொண்ணொம்பது தமிழர்கள் சினிமா பாக்கறவங்க. அவுங்கெல்லாம் சினிமாவ்ல வர்ற பேரையும் செய்தித் தாள்ல வர்ற இந்திப் பேருங்களையுந்தா பெத்த பிள்ளைங்கு வச்சு பெருமப்படறாங்க.
@#@
அடி போடி பொற்கொடி. தாய்கூட அவ காலம் முடிஞ்சா போகவேண்டிய எடத்துக்குப் போயிடுவா. ஆனா ஒருத்தரோட தாய் மொழி அவரோட உசுரு பிரிய வரைக்கும் கூடவே இருக்கும். அடிபட்டாக் கூட அய்யோ அம்மா, அப்பானுதாங் கத்துவாங்க. இதெல்லாம் தெரியா இருக்கறதுக்கு அவுங்கெல்லாம் பாலுக்குடிக்கற பச்சக் கொழந்தைங்களா? போங்கடி நீங்களும் உங்க இந்திப் பேருங்களும்.
@#@
பாட்டி கோவிச்சுக்காதீங்க. எங்கப்பா அன்பழகன் டாக்டர் பட்டம் வாங்கின இந்திப் பேராசியர்தான். அவுரு எங்கூடப் பொறந்த எந் தம்பிக்கும் தமிழ்ஒளி-ன்னு அழகான தமிழ்ப் பேரத்தான் வச்சிருக்காரு. எங்கப்பா மாதிரி ஒரு சில தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று இருக்குது.
@#######@
நான் மொழியியலும் பயின்றவன். எந்த மொழியையும் குறை சொல்லமாட்டேன். தமிழர்களின் இந்திப் பெயர் மோகத்தைச் சுட்டிக்காட்டவே எனது படைப்புகள் பலவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படம்: நன்றி: விக்கிமீடியாஆர்க்