காலத்தின் பிடியில்…

காலத்தின் பிடியில்…

“ஜெஸி……… ஹேய்…. ஜெஸி……..” என்று நான் உரத்த குரல் கொடுக்க….

“இதோ வந்துட்டேங்க…”எனச் சொன்னபடி வெளி வந்தாள் என் மனைவி ஜெஸி என்கிற ஜெஸிமா

தலைக்கு குளித்து முடிகள் ஈரமாக இருக்க…. இளம்பச்சை நிறப் புடவையில் ஆளை அடித்து வீழ்த்திவிடும் அழகோடும்…. நேற்றிரவு ஒட்டப்பட்ட வெட்கம் இன்னும் மறையாத நிலையில்… தேவதைப் பெண்ணாக நின்றிருந்தாள் ஜெஸிமா….

“என்னங்க என்னை கூப்பிட்டுட்டு இப்படி சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”

“ஆமாமாம் ஏன் சும்மா பார்க்கனும்….. ஆரம்பிச்சிட வேண்டியதுதான்…..”எனச் சொன்னவாறே ஜெஸியை பிடித்து இழுத்து என் நெஞ்சில் போட்டுக் கொண்டேன்….

“அய்யோ….. இப்பதான் குளிச்சிட்டு வர்றேன்….. நேத்து பன்ன சேட்டை உங்களுக்கு பத்தலையா….. விடுங்க என்ன விடுங்க…..” என சினுங்க
அவள் முகத்தை இரசித்துக் கொண்டே

“அள்ள அள்ள உன் அழகு குறையலைடி…..” என்றபடி அவள் நெற்றியில் இதழ் ஒற்றினேன்

“ஆமாமாம் இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…… உங்க காரியத்தை சாதிக்கனும்னா…. என்ன வேண்ணா சொல்லுவீங்க…..” என்றாள் சலிப்பாக

“இல்லைடி உன்மையா சொல்றேன்…… நமக்கு கல்யாணம் நடந்த இந்த இரண்டு வருசமா பாக்குறேன்… உன் அழகு கூடிட்டேதான் போகுதே தவிர குறையவே இல்லை…… உன் மேல உள்ள ஆசை எனக்கு குறையவே இல்லை தெரியுமா…..?”

“ஹ்ம்ம் இப்ப எதுக்கு அடி போடுறீங்கன்னு எனக்கு தெரியுது….. என்னை விட்டுடுங்க நான் திரும்பவும் குளிக்க முடியாது….”என என் கை பிடிக்குள் இருந்து விளகிக் கொண்டாள்…

“ப்ளீஸ்மா…. ப்ளீஸ்…..”என நான் வெட்கம் விட்டு கெஞ்ச….

“அய்யோ என்னங்க…… உங்களோட ரொம்ப தொல்லையா போச்சு….. நீங்க இப்ப ஆஃபிஸ் போற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா….?”

“ஓஹ்….. சிட்…. இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு மறந்தே போய்ட்டேனே….”எனச் சொன்னேன் அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவனாக

“ஹ்ம்ம்….. முக்கியமான மீட்டிங்க வச்சிக்கிட்டுத்தான் உங்க பொண்டாட்டிய கொஞ்சிட்டு இருக்கீங்களாக்கும்…..?”

“இல்லைடி…. அந்த ப்ளூ கலர் சர்ட் எங்க இருக்குன்னு கேட்டுத்தான் உன்னை கூப்பிட்டேன்…. ஆனால் என் அழகு பொண்டாட்டிய பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சும்மா…..” என்றேன் அவளது தாடையை பிடித்து ஆட்டியபடி

“ஹ்ம்ம்…. சரி சரி….. உங்க விளையாட்டு போதும்….. அந்த ப்ளூ கலர் சட்டையை மொட்ட மாடில காய போட்டுருக்கேன்…… இருங்க அயர்ன் பன்னித் தரேன்…. சீக்கிறம் கிளம்பி ஆஃபிஸ் போற வேலையை பாருங்க….” என்றபடி மாடிப் படிக்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஜெஸிமா…

போகும் அவளையே நான் பெருமூச்சொன்றை விட்டபடி பார்த்துக் கொண்டிருந்தேன்…

என் பெயர் அப்துல் முபாரிஸ், படித்தது எம்.பி.ஏ, மதுரையில் ஒரு பிரபல நிறுவனத்தில் ப்ரொடக்சன் மேனேஜராக வேலை பார்க்கிறேன், ஜெஸியின் மேல் அளவில்லாத காதலை வைத்துள்ளேன்…. அவள் இல்லாமல் நான் இல்லை….. என் சகலமும் அவளே…..

நான் சொல்வதை வைத்து எனக்கு நடந்தது லவ் மேரேஜ் என்று நினைத்துவிடாதீர்கள் அதுதான் இல்லை….. இது என் வாப்பா என்னை கட்டாயப் படுத்தி நடத்தி வைத்த மேரேஜ்… ஆனாலும் ஜெஸியிடம் பழகியபின் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது…..

எனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வாள்…… எனக்கு பிடித்த மாதிரியான உணவுகளையே செய்வாள்…. எனக்குப் பிடிக்காத அவளுக்கு பிடித்த உணவுகளை எனக்காகவே செய்ய மாட்டாள்…..

என் மேல் அளவில்லாத பாசம் வைத்திருக்கின்றாள் என் மனைவி ஜெஸிமா…. என்னை ஒரு தாயை போல் கவனித்துக் கொள்வாள்…

எனக் கொன்று என்றால் அப்படியே துடித்துப் போய் விடுவாள்…. நான் ஆஃபிசில் இருந்து டென்ஸனாக வரும் போதெல்லாம் ஒரு முத்தம் கொடுத்து என்னை கூலாக்கிவிடுவாள்….

அதானாலேயே அவளது பாசத்தில் நான் பஷ்பமாகிப் போனேன்…. சகலமும் அவளே என சபதம் கொண்டேன்…. என் உயிர் மூச்சாக அவளை சுவாசிக்க ஆரம்பித்தேன்…. சுவாசித்துக் கொண்டே நேசித்துக் கொண்டிருக்கின்றேன்… இன்னும் அவள் மீதுள்ள காதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிற…. சற்றும் குறையவில்லை….

எங்கள் இருவரையும் மேட் ஃபார் ஈச் அதர் என்றே சொல்லலாம்…. ஆம் என் மனைவியை எனக்காக படைத்திருக்கின்றான் இறைவன்….. இவள் என் அருகில் இருந்தால் போதும்… என் கஷ்டங்கள் எல்லாம் தூசியாகிவிடும்… என் நிமிசங்கள் எல்லாம் இனிமையாக கழியும்…..

இத்தனை செய்யும் என் மனைவி என்னிடம் எதையும் எதிர் பார்க்க மாட்டாள்…. மற்ற பெண்களை போல் எனக்கு அதை வாங்கித் தாங்க…. இதை வாங்கித் தாங்க என கேட்க மாட்டாள்….. நான் எதுன்னாச்சும் வேணுமா என்று கேட்டால்

இருக்க இடம்…. உடுக்க உடை….. உண்ண உணவு….. அன்பான கனவன்….. இதுக்கு மேல வேறு என்னங்க வேணும்….. என்பாள்

இதனாலேயே என் மனைவி ஜெஸியின் மேல் எண்ணிலடங்கா காதல்….

ஆனால் எனக்கு ஒரு குழந்தை வேணும்ங்க என்று என் நெஞ்சில் சாய்ந்து கொள்(ல்)வாள்.

நீயே ஒரு குழந்தை உனக்கெதுக்கு இன்னொரு குழந்தை என்பேன் நான்….

அவள் “ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்…” என சிறு பிள்ளை போல் சினுங்குவாள்….

இறைவன் நமக்கு எப்ப கொடுக்க நினைச்சிருக்கானோ அப்ப கண்டிப்பா கொடுப்பான் கவலைப்படாதே ஜெஸி என்பேன் நான்….
.
இப்பொழுது என் மனைவியின் மீதான எனது காதலை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்….

இப்பொழுது…. என் அன்பு மனைவி ஜெஸிமா என் ப்ளூ கலர் சர்ட்டை அயர் பன்னி கொண்டு வந்து கொடுக்க, நான் அணிந்துக் கொண்டு கிளம்பினேன்…..

“என்னங்க….. டிபன் பாக்சை மறந்துட்டு போறீங்க… வாங்கிட்டு போங்க……”

வெளியே சென்று கொண்டிருந்தவன் உள்ளே வந்து டிபன் பாக்சை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றேன்…

“என்னங்க…. அதான் டிபன் பாக்ஸ் கொடுத்துட்டேன்ல…. போக வேண்டியதானே… அப்படியே நிக்கிறீங்க….”

“இல்லை எனக்கு வேற ஒன்னு வேணும்……”

“வேறன்னா….? என்ன புரியலை….?”என்றாள் நெற்றியை சுருக்கியவாறு…
“ஸ்வீட் வேணும்……” என்றேன் நான்

“ஸ்வீட்டா…..? சரி வேலை முடிஞ்சதும் சீக்கிறம் வாங்க அல்வா பன்னித் தறேன்” என்றாள் புரியாதவளாக…..

“அய்யோ… அந்த ஸ்வீட் இல்லை….. இந்த ஸ்வீட்…” என்றவாறே அவளது செவ்விதழை விரலால் வருட…..

“சீ…. போங்க…. அதான் நேத்து நிறையா கொடுத்தேன்ல…..” என்றவளின் முகம் குங்குமமாய் சிவந்திருந்தது…..

“ப்ளீஸ்மா…. ஒன்னே ஒன்னு….. ப்ளீஸ்….”

“முடியாதுங்க…… ஒன்னு கொடுத்தா நீங்க என்னை விடவே மாட்டீங்க…… உங்களுக்கு ஆஃபிஸ்கு லேட் ஆகிடுச்சுல்ல…. போங்க…..எல்லாம் ஈவ்னிங் பார்த்துக்கலாம்” என என்னை விரட்ட….

நானும் அவளை ஒரு பெருமூச்சோடு பார்த்துவிட்டு…..
“பாய்….. சீ யூ….. உம்ம்மா….” என காற்றில் ஒரு பறக்கும் முத்ததை கொடுத்துவிட்டு வெளியேறினேன்……

ஆஃபிஸ் போய்….. அன்று நடந்த முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொண்டேன்….. அதில் வெற்றியும் கிடைத்தது….. என்னுடைய பேச்சுத்திறமையால்….. அந்த கான்ட்ராக்ட் சைன் ஆகியது….. எல்லாம் என்னுடைய நல்ல மனநிலைதான் காரணம்…. இந்த நல்ல மனநிலைக்கு என் மனைவி ஜெஸிதான் காரணம்….

அவளை திருமணம் செய்த நாளில் இருந்து எல்லாம் எனக்கு நல்லதாகவே நடக்கிறது…… மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது உன்மையோ உன்மை….. உறுதியான நல்ல மனம் இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க இயலும்….. அதோடு நல்ல மனைவியும் கிடைத்தால் இந்த உலக வாழ்வும் நமக்கு சொர்க்கம்தான்…

என் மனதிற்குள் என் மனைவிக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்
அன்றைய வேலை வழக்கம் போல் சுறு சுறுப்பாகச் சென்றது…..

மணி நான்கை அடைந்ததும்…… ஆஃபிசில் இருந்து நான் கிளம்பினேன்…..
பைக்கில் செல்லும் வழியில்….. பேக்கரியில் ஸ்வீட்சும்…… பூக்கடையில் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டேன்…. எல்லாம் இன்று நடந்த மீட்டிங் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடுவதற்காக….

டுடே… ரொம்பவும் ஸ்பெசல் என்று நினைத்துக் கொண்டு…… வேகமாக பைக்கினை செலுத்தி எனது வீட்டை சென்றடைந்தேன்…..

வீட்டு வாசலில்…. இரண்டு பெண்களின் காலணிகள் கிடந்தது….. யாராக இருக்கும் என்ற கேள்வியுடனே உள்ளேச் செல்ல….

இரண்டு ஃபர்தா அனிந்த பெண்கள் கண்ணுக்கு கிடைத்தனர்……
எனக்கு ஆப்போசிட்டாக அமர்ந்திருந்ததனால் அவர்களின் முகம் காணக் கிடைக்கவில்லை….. என் மனைவி அவர்களுடன் அமர்ந்து சிரித்து பேசியபடி இருக்க…. நான் வந்ததை கவனித்த ஜெஸி….

“இதோ அவரும் வந்துட்டார்…..” எனச் சொல்ல….

அந்த பெண்கள் இருவரும் என்னை திரும்பிப் பார்க்க….. நான் வெல வெலத்துப் போனேன்……. அவளை நான் சற்றும் இங்கு எதிர்பார்க்கவில்லை.... அவளும் என்னை எதிர் பார்க்கவில்லை போலும் அவளது முகமும் அதிர்ச்சியை தாங்கி இருந்தது……

நான் அவள் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்க….. என் மனைவி அவர்களை அறிமுகப் படுத்தினாள்…..

“என்னங்க……. இது என்னோட ஸ்கூல் மேட்…. சஃபானா….. இது அவளோட அம்மா….” எனச் சொல்ல…

நான் சிலை போல் அப்படியே நிற்க….

“என்னங்க என்னாச்சு, அப்படியே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க, நான் சொன்னது உங்க காதுல விழுந்ததா இல்லையா….”எனச் சொல்லவும்தான் நான் சுதாரித்தேன்….

அவர்களைப் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்….” என்றேன்

அவர்களும் பதிலுக்கு… “வலைக்கும் சலாம்….” என்று சொல்ல

என் மனதில் ஏற்பட்ட குழப்பத்துடன் ஜெஸியின் அருகே அமர்ந்துக் கொண்டேன்…

“தம்பி என் பொண்ணுக்கு ஒரு வாரத்துல நிக்காஹ்…. வச்சிருக்கோம் அவசியம் ரெண்டு பேரும் வந்து கலந்துக்கனும் தம்பி….”என சஃபானாவின் அம்மா சொல்ல…..

டக் கென்று எனது கண்கள் சஃபானாவின் முகத்தை ஏறிட்டது அவளது முகத்தில் வெறுமை….. நான் பார்ப்பதை பார்த்தவள்….. மென்மையாக புன்னகைத்து வைத்தாள்… நானும் வலுக்கட்டாயமாக புன்னகை செய்தேன்…..

சஃபானாவின் அம்மாவிடம் “கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் கலந்துக்கிறோம்….”எனச் சொன்னேன்

பிறகு அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க…. நான் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்…… பேச்சு வாக்கில்….

“அது என்னமோ தெரியலை ஜெஸிமா…. இவளை இத்தனை நாள் கல்யாணம் பன்னிக்க வற்புறுத்தியும், இவ கடந்த அஞ்சு வருசமா…. கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டா….. இப்ப ஒரு நல்ல இடமா வந்தது…. வழக்கம் போல இவ கிட்ட கேட்டு பார்த்தோம் திடீர்னு ஒத்துக்கிட்டா….!! எங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்தான்.” என்றாள் சஃபானாவின் அம்மா…. முகத்தில் மகிழ்ச்சியோடு

கடந்த அஞ்சு வருசம் என்றதும் பட்டென்று என் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது…… திடீர் என ஒரு வலி என் மனதை சுருக் சுருக் கென்று தைத்தது….

அன்றைய நாள் ஞாபகத்திற்கு வந்தது…..

ஆம் அதுதான் என் கல்லூரியின் கடைசி நாள்…..

எல்லோரும் பரஸ்பரம் தங்களது ஸ்லாம் புக்கை பகிர்ந்து கொண்டு எதேதோ எழுதி கொண்டு இருந்தனர்..

ஆனால் நான் மட்டும் அவளைத் தேடினேன்…… தூரத்தில் அவள் வருவது தெரிந்தது…. தனது தோழிகளுடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் எனது ஜூனியர் என கனவு தேவதை, என் கனவுக் காதலி சஃபானா….


இத்தனை நாள் சொல்லாத என் காதலை…. அவளிடம் சொல்லிவிடும் நோக்கில் அவளை நெருங்கினேன்….

“சஃபானா….” நான் அழைத்தேன்

தோழிகளிடம் பேசிக் கொண்டு வந்தவள் என் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்….

“சஃபானா உன்கூட கொஞ்சம் தனியா பேசனும்…..” எனச் சொல்ல
அவளுடன் வந்த தோழிகள் இருவரும் சென்றுவிட

“ஹ்ம்ம் சொல்லுங்க சீனியர்…… நாம மீட் பன்னப் போறது இதுதான் கடைசி நாள் இல்ல….”என்றாள் சஃபானா என் மனதில் உள்ளதை அறியாதவளாக….

நான் ஆமாம் என்பது போல் தலையாட்டினேன்….

“ஹ்ம்ம் சொல்லுங்க சீனியர்…. ஏதோ இரகசியம் சொல்றமாதிரி தனியா பேசனும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருக்கீங்க….. சொல்லுங்க… எனக்கு கிளாஸ்கு டைம் ஆச்சு….”

என் மனமெல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டது….. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை…. அவள் கண்களையே கூர்ந்து நோக்கினேன்

“அட என்னன்னு சொல்லுங்கண்ணா….”என்றாள் சாதாரணமாக…

அவள் அண்ணா என்று சொன்ன வார்தை என் காதில் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது…..

“ஹேய்….. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்னை அண்ணான்னு கூப்பிடாதன்னு……”

“அடப் போங்க சீனியர்……. அந்த கார்திகா மட்டும் உங்களை அண்ணானு சொன்னாள் அவளை ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க….. ஏன் என்னை மட்டும் அண்ணான்னு சொல்ல வேணாம்னு சொல்றீங்க…..”என்றாள்…

எப்படி ஆரம்பிப்பது என்று நினைத்த எனக்கு அவளே பாயின்டை கொடுக்க….. நான் சற்றும் தயங்கவில்லை…. அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்….

“ஏன்னா நான் உன்னை லவ் பன்றேன்……. ஐ லவ் யூ சாஃபானா….” என்று சட்டென்று சொல்லிவிட….

நான் சொன்னதை கிரகித்துக் கொள்ளவே அவளுக்கு ஓறிரு நிமிடங்கள் ஆனது…. பேந்த பேந்த விழித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்….

நானும் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டு நின்றேன்…..
“இ…இதை சொல்லத்தான் என்னை கூப்பிட்டீங்களா…..?” என்றாள் மெல்லிய குரலில்…

நான் அமைதியாக ஆமாம் என தலையை மேலும் கீழும் ஆட்டினேன்……
“நீங்க என்னை என்ன நினைச்சு என்கிட்ட பழகினீங்கன்னு எனக்குத் தெரியாது…. ஆனால் நான் ஒரு நல்ல நண்பணாகத்தான் உங்களை இத்தனை நாள் நினைச்சு பழகினேன், இதை உங்கக் கிட்ட இருந்து நான் எதிர் பார்க்கலை…..” என்றாள் சஃபானா

“சரி இதுவரைக்கும் நீ எதிர் பார்க்கலை…… இப்ப நான் சொன்னதுக்கு உன் பதில்…..?” என்றேன் நான்….

“என்கிட்ட இருந்து என்ன பதில் வரும்னு எதிர்பார்க்கறீங்க…..”
“அதான் உன்கிட்ட கேட்கிறேன்……”

“இங்க பாருங்க அப்துல்….. எனக்கு இந்த காதல் மேலலாம் எனக்கு நம்பிக்கை கிடையாது….. உங்க கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சிருக்கலாம்…. கவர்ச்சியா தெரிஞ்சிருக்கலாம்….. அதனால் ஏற்பட்ட ஒரு வகையான ஈர்ப்புதானே தவிற இதை காதல்னு என்னால எடுத்துக்க முடியாது…….”

“இல்லை…. சஃபானா… உன்னை நான் ரொம்பவும் காதலிக்கிறேன்….. நீ என்கிட்ட பேசுறது பிடிச்சிருக்கு…. உன் கூட இருக்கும் போதெல்லாம் நான் ரொம்ப சந்தோசமா உணர்றேன்…. எனக்கு காலம் பூராவும் உன்கூட இருக்கனும்னு தோனுது……” என்றேன் நான்
அவள் மெலிதாகப் புன்னகைத்துவிட்டு சொன்னாள்……
“இதெல்லாம் இன்னொரு பெண்ணை பார்க்கும் வரைதான்….. பார்த்துவிட்டால் எல்லாம் போகிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்……”

“இல்லை சஃபானா….. இதுவரை உன்னைத் தவிற என் மனதில் யாரையும் நினைத்து பார்த்தது கிடையாது…… இனியும் நினைத்து பார்க்க மாட்டேன்….” என்றேன் நான்

“காதல் என்பது தற்காலிகமானது…… காலத்திற்கேற்றவாறு மனம் மாறும் பொழுது காதலும் கரைந்து போகும்….” என்று ஏதோ அவள் வாழ்வில் அனுபவப்பட்டவள் போல் சொல்ல

“அப்ப என் காதலை பொய்னு சொல்றியா….?”

“நான் அப்படி சொல்லல….. காதல் காலத்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னாமாகிவிடும் என்றுதான் சொல்கிறேன்….. இப்ப இருக்கும் காதல் இன்னும் அஞ்சு வருசம் கழிச்சு இருக்குமான்னு கேட்டா கேள்விக் குறிதான்…..”

“ஓஹ்…. அப்படியா…… இன்னும் அஞ்சு வருசம் கழிச்சு இதே காதலோட நான் வந்து உன்கிட்ட ப்ரபோஸ் பன்னா என்னை ஏத்துக்குவியா…..?” என்றேன் நான்

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா….. அஞ்சு வருசம் கழிச்சு என்கிட்ட வந்து இதே மாதிரி ஐ லவ் யூ சொல்லிப் பாருங்க உங்க லவ்வ நான் ஒத்துக்கிறேன்…..”

“சரி….. சொல்றேன்….எண்ணி இன்னும் அஞ்சு வருசத்துல உன்கிட்ட வந்து என் காதலை சொல்றேன் பார்…. என் காதலை உன்மை என்று நிரூபிக்கிறேன் பார்…” என்றேன் சவாலாக

“ஓக்கே…பார்ப்போம்….. எனிவே உங்க ஃப்யூச்சர் லைஃபுக்கு ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு வேகமாக அவளது வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்….

அன்று அவளது குரலில் ஒரு அலட்சிய பாவனை இருந்ததாக நினைத்தேன்…… விடக் கூடாது அஞ்சு வருசம் கழித்து வந்து என் காதலை சொல்றேன் பார்…. என என் மனதில் உறுதி பூண்டேன்…..

அன்று கடைசியாகச் சந்தித்தது…. இதோ இப்பொழுதுதான் சந்திக்கின்றேன்……

சஃபானா… எனக்காக ஐந்து வருடம் காத்திருந்தாளா…..? என எண்ணும் பொழுது என் மனதில் வலி படர்வதை என்னால் தவிற்க்க முடியவில்லை…… மனதில் வலியுடன் புன்னகைக்க முயன்று தோற்றேன்…..

ஜெஸியும் சஃபானா அம்மாவும் பேசிக் கொண்டிருக்க….. அவ்வப் பொழுது சஃபானாவின் பார்வை என்னை ஏறிட்டு பின்பு தாழ்ந்து கொண்டது….

“அய்யோ பேசிக்கிட்டே உங்களுக்கு டீ… காப்பி கொடுக்க மறந்திட்டேனே….”என எழுந்தாள் ஜெஸி…..

“அதெல்லாம் வேண்டாம்மா…. பரவால்ல…..”என்று சஃபானாவின் தாயார் சொல்ல…..

“இல்லை இல்லை….. வந்ததுக்கு எதாச்சும் குடிச்சிட்டுத்தான் போகனும்….”எனச் சொல்ல…..

“சரி அப்படின்னா நான் உனக்கு உதவி பன்றேன்” என்றவாறே என் மனைவியின் பின்னால் சென்றாள் சஃபானாவின் தாயார்….

இந்த ஒரு சூழ்நிலையை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை….. சங்கட்டமாக அவளை பார்த்துவிட்டு தலை குனிந்து அமர்ந்திருந்தேன்……

“நான் சொன்னது கடைசில உன்மையாகிடுச்சுல்ல…..”என்ற சஃபானாவின் குரல் என்னை நிமிரச் செய்தது….

அவளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை…… அமைதியாக அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்….

“நான் நீங்க வருவீங்கன்னு….. அஞ்சு வருசமா காத்திருந்தேன்……வீட்ல மேரேஜ் பன்னிக்க சொல்லியும் நான் கேட்கல……. உங்களுக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாத்திட்டேன்….. ஆனால் நீங்க காப்பாத்தல…. உங்களுக்கான அஞ்சு வருச டைம் முடிஞ்சு போச்சு அதான் மேரேஜ் பன்னிக்க சம்மதிச்சேன்…….. ஆனால் உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆகிருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல….. நீங்க வருவீங்க வருவீங்கன்னு நானா கர்ப்பனை பண்ணிக்கிட்டு காத்திருந்தது எல்லாம் வேஸ்டுன்னு இப்ப தோனுது…….”

அவள் சொன்ன வார்தைகள் என் மனதை கூர் அம்பு கொண்டு தாக்கியது…… முதல் முறை என் வாயைத் திறந்தேன்…..

“அதுவந்து சஃபானா…..” என ஆரம்பிக்கும் முன்பே

“நீங்க எதுவும் காரணம் சொல்ல வேண்டாம்…..அதான் நான் அப்பவே சொன்னேன்ல….. இந்த காதல் எல்லாம் காலத்தின் பிடியில்….. சிக்கி சின்னாபின்னமாகிடும்னு…..”

என்னால் பதில் சொல்ல முடியவில்லை முகத்தில் வேதனையுடன் சஃபானாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்….

அவளும் அதற்கு மேல் பேசவில்லை…… இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க…….. ஜெஸி ஒரு ட்ரேயில் காப்பி கப்புகளை எடுத்து வர
நான்கு பேரும் காப்பியை குடித்து முடிக்க……

“சரிம்மா ஜெஸி…. நாங்க போயிட்டு வர்றோம்….. தம்பி போயிட்டு வர்றோம்….” என எழுந்துக் கொள்ள…

நானும் எழுந்து கொண்டேன்… இருவரும் வாசலை நோக்கிச் செல்ல…… நானும் ஜெஸியும்…. அவர்களை வழியனுப்ப…… பின்னே சென்றோம்….

இருவரும் காலணிகளை அனிந்து கொள்ள….. சஃபானா என்னைப் பார்த்தாள்….. அதற்குமேல் அவளால் முடியவில்லை வேகமாக திரும்பிக் கொண்டாள்…. கர்ச்சீபை வைத்து அவளது முகத்தை துடைப்பதை வைத்து அவள் அழுகிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன்

“என்னமா ஆச்சு….” என்றாள் அவளது தாய்…….

“ஒன்னுமில்லைம்மா..…… கண்ல தூசி விழுந்துடுச்சு” என்றாள் சஃபானா சமாளிப்பாக

எனக்கு மட்டுமே தெரியும் அது தூசியல்ல கண்ணீர் என்று…..

அதன் பிறகு சஃபானா என்னை ஒரு முறைக் கூட பார்க்கவில்லை….. இருவரும் ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்

என் மனதை ஒரு இனம் புரியாத வலி வந்து ஆட்டி படைத்தது…… வேகமாக உள்ளேச் சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்து கொண்டேன்…… தலையை பிடித்துக் கொண்டேன்……

என் பின்னே வந்த ஜெஸி, நான் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு பதறிப்போனாள்….

“ஹய்யோ என்னாச்சுங்க…..என்னாச்சு ஏன் தலையை பிடிச்சிட்டு உக்கந்துட்டீங்க…..” என்றவாறே என் அருகில் அமர்ந்தவாறே என் தலையை கோதிவிட….. ஒரு இனம் புரியாத எரிச்சல் என் மனைவியின் மேல் ஏற்பட்டது….

“கொஞ்சம் என்னை தனியா இருக்க விடுறியா….?” என்றேன் எரிச்சலடைந்த குரலில்

“என்னங்க என்னாச்சு….. ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு…. சொல்லுங்க… தலை வலிக்குதா…..?” என்றவாறே என் நெற்றியில் அவள் முத்தமிட….

நான் உட்சபட்ச டென்ஸனுக்கு ஆளானேன் “தனியா விடுன்னு சொல்றேன்ல……”எனக் கத்தியபடி அவளைப் பிடித்து கீழே தள்ளிவிட்டேன்…

என்னுடைய செயலால் அவள் மிரண்டு போனாள்….

என் மனைவியிடம் நான் கோபம் கொண்டது இதுவே முதல் முறையாதலால் என் செயலால் ஜெஸியின் கண்களில் நீரை வரவழைத்தது……

“என்னங்க ஆச்சு…… ஏன் இப்படி…..எ…” என சொல்லி முடிக்க முடியவில்லை….. விசும்ப ஆரம்பித்தாள்…..

என் மனம் குற்ற உணர்வில் குறு குறுக்க எழுந்து வேகமாக எனது அறைக்குள் நுழைந்து கொண்டேன்…… அன்று முழுவதும் நான் ஜெஸியிடம் பேசவில்லை……

“என்னங்க சாப்பிட வாங்கங்க…..”

“இல்லை எனக்கு பசிக்கலை……. வேண்டாம்”என்றேன்
“ஏங்க இப்படி பன்றீங்க….. நல்லாத்தானே இருந்தீங்க திடீர்னு என்னாச்சு….”

“என்கிட்ட எதுவும் கேட்காத என்னை தனியா விடு…….பேசாமா போ….”என்றேன் நான்

என் மனம் முழுவதும் வேதனையில் நிறைந்திருந்தது…….

“ஒரு பெண்ணிற்கு த்ரோகம் இழைத்துவிட்டேன்…… எனக்காக காத்திருந்த பெண்ணுக்கு துரோகம் இழைத்துவிட்டேனே…… பாவி நான் பாவி…..”என என்னையே நொந்துக் கொண்டு படுத்திருந்தேன்…. கொஞ்ச நேரம் அப்படியே கண் மூடி படுத்திருந்தேன்…..பின்பு கண் விழித்து பார்க்க

ஜெஸி அழுதபடி கீழே படுத்திருந்தாள்…. முதுகு குழுங்கிக் கொண்டு இருந்தது…… அவள் மேல் பறிதாபம் ஏற்பட்டது….

பாவம் நான் செய்த தப்புக்கு இவள் என்ன செய்வாள்….. பிடித்து தள்ளிவிட்டேனே….. ஹய்யோ என் கண்மணி அழுகிறாளே….. இப்ப நான் என்ன பன்னுவேன்…..

ஒரு முடிவு எடுத்தவனாக எழுந்தேன் கீழே அவள் பக்கம் அமர்ந்து அவளது தலைமுடியை கோதிவிட…… எழுந்தவள் என்னை கட்டிக் கொண்டாள்…..

என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்……. “ஏங்க என்னை தள்ளிவிட்டீங்க…. என்னாச்சு உங்களுக்கு…..”

“சாரிடி….. நான் பன்ன தப்புக்கு….. உன் மேல கோபப் பட்டுட்டேன்…..’எனச் சொல்லியபடி அவளது நெற்றியில் ஆறுதலாக இதழ் ஒற்றி எடுத்தேன்….

அவள் என்னை விட்டு விலகி எழுந்து அமர்ந்து கொண்டாள்…….

“என்ன தப்பு பன்னீங்க…..” அவளது குரலில் ஒரு அதிகாரத் தொணி….
நான் அமைதியாக அவள் முகத்தை பார்க்க அவள் சொன்னாள்……
“ஹ்ம்ம் உங்க பேக்கை பார்த்தேன்….. அதுல மல்லிகைப் பூ….. ஸ்வீட் எல்லாம் இருந்துச்சு…. சோ….. உங்களுக்கு ஆஃபிஸ் ல பிரச்சனை இல்லை… அப்பறம்தான் ஏதோ நடந்திருக்கு….சொல்லுங்க” அதட்டினாள் என் அன்பு மனைவி….

எனக்கும் என் மனதில் உள்ளதை யாரிடமாவது கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது…. அவளிடம் கொட்ட ஆரம்பித்தேன்….

சொல்லி முடித்துவிட்டு….

“நான்….. அவளுக்கு துரோகம் பன்னிட்டேன்ல……ஜெஸி….”என்றேன் தழு தழுத்த குரலில்……

“இல்லை….. இல்லை…. இல்லவே இல்லை…”

“என்ன ஜெஸி சொல்ற….. நான் துரோகம் பன்னலையா…..?” என்றேன் வியப்பாக

“இல்லைங்க நீங்க துரோகம் பன்னலை…… நீங்க அவளை காதலிச்சது எந்த அளவு உன்மையோ….. அதே அளவு அவளுக்கு நீங்க துரோகம் பன்னலைங்கறது உன்மை….. அவ உங்களை அப்பவே ஏற்றுக் கொண்டு இருந்திருக்க வேண்டும் ஆனால் அவ என்ன பன்னா….. அஞ்சு வருசம் கழிச்சு வரச் சொன்னாள்……

உங்கம்மா படுத்த படுக்கைல…. உங்களோட கல்யாணத்தை பார்க்கனும்னு என்னை அவசரமா பொண்ணு கேட்டு கட்டிக்கச் சொல்லும் போது உங்களால என்ன பன்ன முடியும் சொல்லுங்க…..

நீங்க ஒரு சூழ்நிலைக் கைதி அவ்வளவுதான்…. என்னை கல்யாணம் பன்னிக்கிட்டீங்க……. அவ உங்கக் கிட்ட நான் அஞ்சு வருசம் உங்களுக்காக காத்திருப்பேன்னு சொல்லவே இல்லையே…..? அவ என்ன சொன்னாள்…….? எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை…… காதல் காலத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிடும் என்றுதானே சொன்னாள்….. பிறகு ஏன் அவள் உங்களுக்காக காத்திருக்க வேண்டும்…….? அவள் காத்திருப்பாள் என்று உங்களுக்குத் தெரியாதே…..? அப்படி இருக்கும் பொழுது இது எப்படி துரோகம் ஆகும்……?

ஆனாலும் என்னை கல்யாணம் பன்னும் வரை அவளைத்தானே நினைத்துக் கொண்டு இருந்தீங்க……… என்னை மேரேஜ் பன்னதும் எனக்கு துரோகம் பன்னக் கூடாதுன்னு உங்க மனசை வருத்திக்கிட்டு அவளை மறந்து எனக்கு நல்ல கணவனா இருந்தீங்களே….!! எனக்கு நீங்க துரோகம் பன்ன நினைக்கலையே……? நேற்று வந்த எனக்கே நீங்க உன்மையா இருக்க நினைக்கும் பொழுது…… அவளுக்கு நீங்க உண்மையாத்தான் இருந்திருப்பீங்க….. நீங்க அவளுக்கும் துரோகம் பன்னலை….. கட்டுன பொண்டாட்டிக்கும் துரோகம் பன்னலை….. நீங்க சஃபானா மேல வச்சிருந்த காதலும் உன்மைதான் என்மேல இப்ப வச்சிருக்க காதலும் உன்மைதான்….. நீங்க யாருக்கும் துரோகம் பன்னவே இல்லைங்க” என நீளமாக எனக்கு என் குழந்தை அறிவுரைக் கூறினாள்…..

ஜெஸியின் பேச்சைக் கேட்டு நான் பிரம்மித்துப் போனேன்…. என் மனைவியை தத்தி என்றுதான் நினைத்திருந்தேன்…. ஆனால் இவ்வளவு பேசுவாள் என்று நான் நினைக்கவில்லை….

“அப்ப நான் துரோகம் பன்னலையா…..?”’

“இல்லைங்க இல்லவே இல்லை…..”என தன் கண்ணங்களில் நீர் வழிய என் முதுகில் கை போட்டு என்னை இருக்கிக் கொண்டாள்…..

“நான் துரோகம் பன்னவில்லை என்பதை அறிந்ததும்….. என் கண்ணத்தில் ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது….”என்னை எனக்கே உணர்த்திய என் மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது….. இவள் கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்….. என நான் நினைத்துக் கொண்டேன்…

“கடங்காரி…. கடங்காரி…… நல்லா இருந்த குடும்பத்துல இப்படி கும்மி அடிச்சிட்டு போயிட்டாளே…. கொஞ்ச நேரம் நான் பதறிப் போயிட்டேன் என்னாச்சோ ஏதாச்சோன்னு” என்றாள் ஜெஸி….. சஃபானாவின் மீதுள்ள கோபத்தோடு…

“ஹேய் அவளை ஏன்டி திட்டுற…. அவ இன்னைக்கு வந்ததால…… இத்தனை நாள் என் மனதின் ஓரத்தில் இருந்து அரித்துக் கொண்டிருந்த விசயம் முடிவுக்கு வந்திடுச்சுல்ல….”

“ஹ்ம்ம்ம்… எல்லாமே நல்லதுக்குத்தான்……….. ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட இப்படி நானோ நீங்களோ அழுது பார்த்ததே இல்லைல…. கடங்காரி ஒரே நாள்ல…. உங்களுக்கு என் மேல கோவத்தை வர வச்சிட்டாளே….” என்றாள் ஜெஸி சலிப்பாக….

“அய்யோ சாரிடா…. ஜெஸி…… வலிக்குதா….?”என்றவாறே அவள் கையை பிடித்து அவளை இழுத்து என் மீது போட்டுக் கொண்டேன்…..

என் மீது பூ ஒன்று படுத்துக் கிடக்க….. அந்தப் பூவின் கூந்தலில் வாசம் பிடித்தேன்…..

“உன் அழகு மூஞ்சிக்கு உன் அழுகை நல்லாவே இல்லை” என்றேன் நான்

“என் அழகு புருஷனுக்கும்தான் நல்லா இல்லை……”என்றாள் என் கண்ணத்தில் முத்தம் கொடுத்தவாறு

“உனக்கு குழந்தை வேணும்னு கேட்டேல்ல……?”

“ஆமாம்….எனக்கு குழந்தை வேணும்…” என்றாள் ஆர்வம் மிகுந்த குரலில்

“இப்படி பேசிக்கிட்டு இருந்தால் எப்படி குழந்தை வருமாம்.…..?”

“ஏன்… வேற என்ன பன்றதாம்….”என்றாள் அப்பாவியாக…

“ஒன்னும் தெரியாத பச்சைக் குழந்தை… வாடி என் செல்லக் குட்டி என்றவாறே குழந்தையை உருவாக்கும் வேலையில் இறங்கினேன்….”

“உனக்கு பெண் குழந்தை வேணுமா….. இல்லை ஆண் குழந்தை வேணுமா….?”

“எனக்கு உங்கள மாதிரி ஆண் குழந்தைதான் வேணும்” என்றவாறே எனது மூக்கை பிடித்து ஆட்டினாள்….

“ஆனால் எனக்கு உன்னை மாதிரி.. பெண் குழந்தை வேணுமே….?”என நான் சொல்ல

“போங்க எனக்கு ஆண் குழந்தைதான் வேணும்….”என அவள் அடம் பிடிக்க….

“இல்லை இல்லை பெண் குழந்தைதான்…..”என நான் அடம் பிடித்தேன்….

இரவு முழுவதும் அவ்வாறே இருவரும் சண்டை போட்டோம்…… குழந்தை உருவாக்கும் சண்டை….

நல்ல குழந்தை பிறக்கட்டும்..
சுபம்.

எழுதியவர் : அபுவந்த் (10-Jul-16, 8:58 am)
பார்வை : 653

மேலே