செரயாக் கண்ணு

செரயா, செரயாக் கண்ணு அங்கேண்டி நிக்கற. உள்ள வாடி. தெருவிலெ போற கண்டவனுக எல்லாம் உம் மேல கண்ணு

போட்டுறுவானுக. உள்ள வாடி தங்கம்.

@@@@
பாட்டி அவுனுக கண்ணு போட்டா எனக்கு ஒண்ணும் ஆகாது. வேணுன்னா அவனுக கால் மண்ணை எடுத்துத் தர்றேன்.கற்பூரம் ஏத்தி

மூணு தடவ எந்தலையைச் சுத்தி என்ன “த்தூ த்தூ த்தூ”ன்னு துப்பவச்சு போட்டுருங்க. எல்லாம் சரியா போயிடும். அவனுக

கண்ணவிட உங்க வாய் தான் ரொம்ப மோசம் பாட்டிம்மா.
@@@
ஏண்டி செரயா. உம் மேல என் உசுரே இருக்குது. என்னப் போயி என்னோட வாயி மோசன்னு நீ சொல்லாலாமடி தங்கம்.
@@@
பாட்டி, உங்க வாய் நல்லாத்தான் இருக்குது. எம் பேரு ஸ்ரேயா. நீங்களும் இந்த இருபது வருசமா என்ன செரயா, செரயா-ன்னே

கூப்படறீங்க. என்னோட தோழிகள் எல்லாம் என்ன செரயா, செரயா, சரியா-ன்னு கிண்டல் பண்ணறாங்க பாட்டிம்மா.
@@@@
நா என்னடி ஆத்தா பண்ணட்டும். உன்னோட இந்திப் பேரு என்ற வாயிலெ நொழையமாட்டங்குதே. ஏண்டியம்மா, நம்ம தமிழ்ல்

அழகான பேருக்கா பஞ்சம்? இந்த மாதிரி உம் பாட்டி வாயிலெகூட நொழையாத பேர உங்கப்பனும் ஆத்தாளும் உனக்கு

வச்சிருக்காங்களே. படிச்சிருந்தும் என்ன பிரயோசனம். சினிமாப் பைத்தியங்களா இருக்கற அவுங்களுக்கு நம்ம தமிழ் மேல பற்று

இருக்குமா? ஏண்டி நீயே சொல்லுடி. எந்த இந்திக்காரராவது தன்னோட பொண்ணுக்கு தமிழ்ப் பேர வச்சிருக்காரா?
@@@
பாட்டி எங்க அம்மா, அப்பாவக் கொற சொல்லி என்ன பிரயோசம். தமிழ் நாட்டில இருக்கற படிச்சவஙக, படிக்காதவங்க எல்லாம்

அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தாம் வைக்கறாஙக.
@@@@
போடி. நீயும் படிச்சவ தான். பத்துப் பேரு மண்ண அள்ளித் தின்னா நாமளும் அதச் செய்யணுமா என்ன?

ஊரெல்லாம் பட்டாசு வெடிச்சி எல்லாருக்கும் தொல்லை கொடுப்பாங்க. அடுத்தவங்களுக்கு தொல்லை தர்றமேன்னு யாரும்

வெக்கப்படமாட்டாங்க. ஆனா உங்க சித்தப்பன் வள்ளியப்பன் சின்ன வயசில இருந்தே அந்த பட்டாசு சனியனை எல்லாம்

தொடமாட்டான். அவந் தொழிலு இந்திப் பேராசிரியர் வேலை. இருந்தாலும் அவனுக்கு தமிழன்ங்கற உணர்வு இருக்குது. அவம்

பிள்ளைஙக ரண்டு பேருக்கும் பொய்யாமொழி, அருள்மொழி -ன்னு அழகான தமிழ்ப் பேருங்களா வச்சிருக்கான். உங்கப்பனும்

ஆத்தாளும் தமிழ்ப் பேராசிரியர்களா வேல பாக்கறாங்க. ஆனா தமிழ்ப் பற்று கடுகளவும் கெடையாது. நாந்தான் அவனப்

பெத்ததுக்கு வெக்கப்படறன்.
@@@@
சரி விடுங்க பாட்டி. நீங்க சொல்லறதும் நியாயம்தா. நா வேணுன்னா எம்பேர நல்ல தமிழ்ப் பேரா வச்சுக்கறேன். நீங்க இனிமே அந்த

செரயா இனி எனக்கே சொந்தமில்ல. நீங்களே எனக்கு நல்ல தமிழ்ப் பேரா நாளைக்குச் சொல்லுங்கா. அதுவரைக்கும் என்ன

பொன்னி-ன்னு கூப்புடுங்க. அந்தப் பேரு உங்களுக்குப் பிடிச்சா நா அதையே வச்சுக்கறேன்.
@@@@@@

சரிடி பொன்னி. நாளைக்கு எம் முடிவைச் சொல்லறண்டி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ശ്രേയാ; ಶ್ರೇಯಾ; શ્રેયા; శ్రేయా; ஷ்ரேயா; ; শ্রেযা; ਸ਼੍ਰੇਯਾ

Shreya (Hindu : श्रेया) is a Hindi/Sanskrit contemporary feminine given name, which means "auspicious" or "lucky".

Shreya = Beautiful; Auspicious; Better; To give credit to சோமேசானி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிபீடியா & இண்டியாசைல்ட்னேம்ஸ்காம் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (10-Jul-16, 5:58 pm)
பார்வை : 193

மேலே