ஆசை குறையாதிருக்கும்
அழகே!
உன் ஒற்றைப் பார்வைதான்
என்னை கவிஞனாக்கியது!
அன்பே!
உன் களைந்த உடைதான்
என் குளிரைப் போக்கியது!
உயிரே!
அழகான இரவுகள்
அன்பான உறவுகள்
என்னை மயக்குதே
உனது செய்கைகள் !
கனவுகள் துளிர்க்கும்
காதலைப் பெருக்கும்
அதிகாலை சூரியன்
இருளை விளக்கும்
உன்னோடு இருந்தால்
மனம் கிழக்கை வெறுக்கும்
காமம் இருளை அரவணைக்கும்
சேவல் எழுப்பு குரல்
அது எழுப்பும் என்னவளை
இன்பம் தந்தவளை
என்னிடமிருந்து பிரிக்கும்
அந்தி மாலை எப்பொழுது பிறக்கும்
அதைக் காணும் வரை
என்னிதயம் துடியாய் துடிக்கும்
வெண்ணிலவை எதிர்பார்த்து
எந்நாளும் ஏங்கித் தவிக்கும்
என் நிலவு வந்தவுடன்
அவள் கைகள் விளக்கை அணைக்கும்
என் கைகளோ அவளை கட்டிப்பிடிக்கும்
என்னருகில் அவள் இருக்கும்வரை
என் நெஞ்சில் ஆசை எப்படி குறையும்?
கூடும் இன்பத்தில் இரவுகள் கரையும்
என் வாழ்வும் அவள் வாழ்வும் விடியும்!

