வாழ்க்கை
பாக்கிஸ்தான் இந்தியா
மாமியார் மருமகள்
சண்டைகள் எப்போது தீரும்?
கேள்வி என்பது சோதனை
பதில் என்பது சாதனை!
போர்க்களம் செல்ல துணிவு வேண்டும்
வன்முறையைத் தூக்கினால் அழிவுண்டு
எதையும் நேருக்கு நேர் நின்று
பேசி தீர்வு காண்பதே நன்று!
அனுசரித்துப் போவதொன்றும்
அடிமையில்லையே...
அடக்க நினைப்பதினால்தான்
வரும் தொல்லையே...!
சந்தேகம் என்பது எமனை அழைப்பது
சந்தோசம் என்பது புரிந்து கொள்வது!
சட்டம் சாத்தானய் மாறுகையில் ...
நியாயம் எப்படி உயிர் வாழும்?