காதலை உணர்வாய்
முதன் முதலில் உன்னை
பார்த்ததென்னவோ
மண்ணில்தான்!
நீ இன்று இருப்பதென்னவோ
விண்ணில்தான்...
கண்ணழகே!
தினமும் இப்படி ஒற்றைப் பார்வை பார்த்தால்
என் நெஞ்சில் காதல் முளைக்காதோ!
அன்புடமை கொண்டு
என் அறிவுடமைதனை
வெல்லும் பெண்ணே!
உன்னை நான் வெல்வது கடினம்தான் !
தேன் சிந்தும் செவ்விதழே!
தினம் திறந்து பேசு
இளம் செந்தமிழை...
வா நிலவே!
என் மன வானில்
தினந்தோறும் வந்து நீ உலவு ...!
எழிலாகட்டும் என் வாழ்வும்...
உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காகத் துடிக்கும் இதயத்திற்கு
வலியும் வலிமையும் அதிகம்தான்
என்பதனை விரைவில் நீ உணர்வாய்...
உனக்காக துடிக்கும் இதயத்தை
எனக்காக ஒரு நாள் துடிக்கச் செய்
அப்பொழுதுதான்
என் காதலின் அருமை
உனக்கு தெரியும்!