கருவறை

ஆடையின்றி இருந்தாலும்
அச்சமின்றி நான் இருந்தேன்
வல்லூறு பார்வையிலிருந்தும்
வள்ளுவனின் மூன்றாம் பால்தனை
இச்சையாக்கும் இவ்வுலகில்
இன்று நான் அவதரிக்க வேண்டுமே
ஈரைந்து மாதங்கள் இன்றொடுமுடிகிறதே
காப்பான இவ்வறையை
கடந்துசெல்ல மனமில்லை ..........

எழுதியவர் : ராமகிருஷ்ணன் (12-Jul-16, 10:18 pm)
Tanglish : karuvarai
பார்வை : 97

மேலே