வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
வருந்துகிறேன்!!
சிறகடிக்கும் கனவுகள் சிறைப்பட்டு கொண்டிருப்பதினால்..
வருந்துகிறேன்!!
தீயெண்ணம் தீங்காற்று தினம் வீசி வருவதினால்.
வருந்துகிறேன்!!
நல்லோரின் கரம் கட்டுண்டு இருப்பதினால்.
வருந்துகிறேன்!!
ஆசைக் கடலில் மூழ்கும் மனிதகுல நிலையினால்..
வருந்துகிறேன்!!
ஒழுக்கம் இங்கே கானல் நீராய் மறைவதினால்..
வருந்துகிறேன்!!
இரக்கம் இங்கே நித்தம் இறந்து வருவதினால்..
வருந்துகிறேன்!!
ஈகையின் ஈரம் இதயத்தில் வற்றி வருவதினால்..