சகுனம்

காலையில சீக்கிரமா எழுந்துகிட்டு
கால் இரண்டில் பம்பரத்தை மாட்டிகிட்டு
காற்றைவிட வேகமாக சுத்திகிட்டு
வேலைக்கு போகிற நேரம் பார்த்து

காலாற நடந்துவந்த பூனை ஒன்னு
கண்டதங்கே ருசியான ரொட்டித்துண்டு
கால் நான்கும் வேகமாக எத்திக்கொண்டு
நான் போகும் பாதை குறுக்கே பாய்ந்ததம்மா

சகுனம் பார்க்க வந்த என் சண்டி ராணி
சனியன் புடிச்ச பூனைன்னு திட்டிபுட்டா
சகுனம் பார்க்க நேரமில்லைனு நான் சொல்ல
சண்டி ராணி சாட்டைப்பார்வை வீசிப்புட்டா

குடுவை தண்ணீர் குடிக்கவேண்டி
சடுதியாக உள்ளே போனேன்
குடிச்சுப்புட்டு வெளியில் வந்தா
கொடுமை ஒன்றை நேரில் பார்த்தேன்

சகுனம் பார்க்க சண்டி ராணி
யாருமில்லா அந்த பூனை
சக்கரத்தில் மாட்டிக்கொண்டு
செத்ததடி என் கண்முன்னே

உண்மையில் யாரால யாருக்கு சகுனம் சரியில்லை?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-Jul-16, 7:09 pm)
Tanglish : sakunam
பார்வை : 127

மேலே