திக்குவிசை-, திக்குவிசை

யார பாட்டிம்மா திக்குவிசை, திக்குவிசை-ன்னு கூப்படறீங்க?
@%@@
நா யாரடி கூப்படப்போறென் தாமரை.எம் பேரனத்தாங் கூப்படறேன்.
@#@
பாட்டிம்மா உங்க பேரம் பேரு திக்குவிசை இல்ல.
@%@
எம் பேரனுக்கு எம் மவன் வச்ச பேரு எனக்குத் தெரியாதா?
@#@
அது தெரியும் பாட்டிம்மா. ஆனா அந்தப் பேர உச்சரிக்கறவிதந்தான் சரியில்ல.
@#@
என்னடி தப்பு கண்டுபிடிச்ச நீ?
@#@
உங்க பேரம் பேர திக்விஜய்-ன்னு தான் சொல்லணும். Digvijay
@%@
அடி போடி கூரு கெட்டவளே. நம்ம தமிழப் பேரா இருந்தா நாஞ் சரியாச் சொல்லுவேன் . வாயில நொழையாத அர்த்தம் தெரியாத பேர வச்சா அதுக்கு நா என்னடி பண்ணுவேன்.
@@###@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!!!@@@@##
Digvijay=one who conquers all

எழுதியவர் : மலர் (17-Jul-16, 5:45 pm)
பார்வை : 80

மேலே