விடியல் வேண்டி
விடியல் வேண்டி விடிவெள்ளி தொட்டு
அண்டசராசரமும் அலையும் என்மனம்
பிணம்தின்னும் நரியின் ஊளை
கேட்டு அஞ்சுவது ஏனோ
இருள் உலகின் இருளனாய் நான்
வெளிச்சம் தேடி அழைகிறேன்
வெளிச்சம் கண்டு பயம்கொண்டு
மீண்டும் இருளில் மறைகிறேன்
தெளிவு வேண்டி தெளிவற்று
திரியும் நீரோடை நான்
ஒரு நூல் இடைவெளியில் உலகை
வெறுத்தவன் நான்
காட்சிபிழையான காட்சி பொருள்லொன்று
உயிரற்று உடல் கொண்டு
ஊனம் என்னும் பிண்டமாய்
அசைவின்றி கிடக்கும் மலம்போல்
என் வாழ்க்கை !!!