நெல்லை சீமை

என் இனிய தமிழ் நெஞ்சங்களே !

காகித நிலத்தில் கவிதைகள் தந்த “இறைநேசன்”
எழுதிய கவிதைகளை உங்களோடு வாசித்து காண்பிக்க
வருகிறேன் ...........

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னோடும் ,என்
எழுத்தோடும் நடை பழகி வந்த எனக்கு,என் நினைவுகள்
தான் மனசாட்சி ……

அகர வரிசைகளை எழுத்துகூட்டி வாசித்த போது அது
என்னுள் கவிதைகளாக பதிந்தது மனதில் ……

அதோ !

கரை புரண்டு வரும் வற்றாத ஜீவா நதி அசைவுக்கு
பரணி பாடி வரும் என் தாமிரபரணி கரைகளில்
செழுமையான பசுமையை தான் காண முடிந்தது.....

நான் பிறந்த மண்ணின் பெருமைகளை சொல்ல
என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நெல்லுக்கு வேலியாக அமைந்த இந்த நெல்லை
சீமையில் ஏத்தனை அணைகள், என்ன நீர் செழிப்பு
என் முதல் எழுத்துக்கள் முத்தான படைப்புகள் இந்த
மண் தந்த வாசனை ..........

ஆம் !
சுவாசிக்க மறந்த தென்றல் !
மலையரசி எழில் தோற்றம் !
பசுமையின் ஆட்சி !

நெல்லை மண்ணில் புதைந்திருக்கும் மகிமை !

இங்கே !

கற்பனையின் தோற்றம் கம்பீரமாக .............

இயற்கையின் தாலாட்டு இமயமாக .............

நெல்லை சீமை !

மேற்கு தொடர்ச்சி மலைகளின் தாயகம் !

கவிஞர் : இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன். (22-Jul-16, 8:36 pm)
பார்வை : 387

மேலே