திருநெல்வேலி

அன்புக்கு தருவான் அல்வா
இனி வம்புக்கு வந்தா அருவா

தெம்புக்கு தண்ணீர் தாமிரபரணி
பண்புக்கு இந்த ஊர் மக்கள்

பேச்சுக்கு இந்த மண் வாசனை
மூச்சுக்கு இந்த பிறந்த மண்ணு

உறவுக்கு என்றும் உண்மையா
உரிமைக்கு நல்ல தோழனா

புலியா சீருவான் இவன் வீரனா
புயலா வீசுவான் அவன் இனமா

காளைய அடக்கிற தனி பலம்
கன்னியர மதிக்கிற நல்ல குணம்

வீரம் கொண்ட பாசக்காரன் இவன்
இனி வேசமில்லா ரோசக்காரன்

நெல்லுக்கு வேலியாக அமைந்து
சொல் வந்த எங்க "திருநெல்வேலி"

கவிஞர்.இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (22-Jul-16, 8:27 pm)
Tanglish : thirunelveli
பார்வை : 4044

மேலே