ஆறாம் அறிவு
நீ கவிஞனா ?
நல்ல கலைஞனா?
கண்டக் கழுதையை விரும்பும் இளைஞனா?
அன்பை வளர்க்கும் காதலனா ? தன்
அறிவை அழிக்கும் காமுகனா?
படிக்காத பாமரனா? -நாளும்
தெரிந்தும் கெட்டக் கோபக்காரனா?
பாகுபாடு வந்து விட்டால்...
பள்ளியறையிலும் இன்பமில்லை !
வேறுபாடு அறியாவிட்டால்...
விஞ்ஞானத்திலும் வளர்ச்சியில்லை!
பல சாதி மதம் தேவையில்லை!
மானுடத்து பிறவி இன்றே!
விலங்கிற்கு இல்லை - ஆறறிவு!
அது மட்டும் அதற்கிருந்தால்...
தன்னினத்தைத் தானே
அழித்துக் கொல்லுமோ?!

