எனக்கோர் உண்மை தெரிஞ்சாகனும்
எனக்கோர் உண்மை தெரிஞ்சாகனும்
சாதிமதம் பார்ப்பதில்லை என்பார்
சமத்துவ சமதர்மம் என்றே பேசுவார்
சாதிமாறா மணமகன் தேவையென்று
அலைந்து திரிவார் பலருமிங்கே ....!
ஊருக்கு உபதேசம் செய்பவரே இங்கு
தனக்கென ஒருகொள்கை கடைபிடிப்பர்
ஓட்டுக்கு மட்டும் அனைவரும் வேண்டும்
வீட்டுக்கு என்றால் சாதிவெறி பிடிப்பதேன்
எனக்கோர் உண்மை தெரிஞ்சாகனும் .....!
பழனி குமார்
( படத்தில் இருப்பது என் விழியே )

