துவக்கம்

துவக்கம்…!!

விலகி விலகி நடக்கிறார்கள்
நெருங்குகிறது காதல்.
*
சிலையின் அருகில் நின்று
எடுத்து கொண்டார்கள் செல்பி.
*
சாமி கும்பிட்டாள்
கையில் கிடைத்தது பூ,குங்குமம்.
*
வெயிலில் அலைந்தாள்
வாடிவிட்டது கூந்தலில் பூ.
*
அவள் வேலையில் இருந்தாள்
அவன் வேலை தேடினான்.
ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (26-Jul-16, 6:11 am)
Tanglish : thuvakkam
பார்வை : 204

மேலே