என்னவள்

இளவேனில் தென்றலாய்
என் வாழ்வில் வந்தவளே
உன் முகம் பார்த்து
என் முகம் மறந்தேன்
உன் புன்னகை பார்த்து
என்னை மறந்தேன்
என்னை முழுமையாக
கொள்ளை கொண்டவளே
நீ என்னவள் என்று
என் உள்ளம் சொல்கிறது
இன்று நீ என் மனைவியாக
என்னுடன் கை சேர்த்து வருகையில்
என் உலகம் மறந்து போகிறேன்
என்ன மாயம் செய்தாயோ.....

எழுதியவர் : சத்தியா (26-Jul-16, 7:24 am)
Tanglish : ennaval
பார்வை : 118

மேலே