இரவு நல்ல மழை
இரவெல்லாம்
கொட்டி தீர்த்தது
மழை
துளியெல்லாம்
சிந்திகொண்டிருக்கிறது
இலை
குளிர்வாடை
அடித்து கொண்டிருக்கும்
காலை
ஜதிஓசை
கேட்டு கொண்டிருக்கும்
மழலை
மெதுவாக மெதுவாக
மேனி தழுவும்
பனி
சில்லென்றே சில்லென்றே
கால் நனைக்கும்
ஆழி
புதிதாக
பூத்த பூவை
வண்டொன்று
தேன் எடுக்க
விளையாட்டாய்
வந்த மாமன்
அசையாது கட்டிக்கொள்ள
சிலையாகி
நின்றுவிட்டேன்
வண்டும்
பூவும்
ஒட்டிக்கொள்ள
தேன் சிந்திக்கொள்ள
மாமன்
என்
மாமன்
வேலையாய் ஓட
பிடித்து தானே
இழுத்து தானே
கட்டிக்கொண்டேன் நானும்
சாளரம் வழியே
வழியும்
நீர் பார்த்து
சமையலை முடித்து
மண் வாசம் லயித்து
ஏந்தினேன் ஏந்தினேன்
ஜன்னல் வழி துளியை
என்னருகில்
அவர் வந்து ஆசுவாசம் அடைந்து
மழையோடு
என்னோடு
சிறு குழந்தையாய்
பல சேட்டைகள் செய்து வேடிக்கை பார்த்தார்
நான் ஜன்னல் வழி பார்ப்பதை விட்டு
என்னவரையே பார்த்தேன்
# நேற்று இரவு பெய்த பேய் மழைக்கு
இன்று பூத்த காளான் கவிதை
இரவு நல்ல மழை எங்கள் ஊரில்.
இரவு முழுவதும் விடாமல்
விடிய விடிய பெய்து
தற்போது தான் ஓய்ந்தது
~ பிரபாவதி வீரமுத்து