என்னவளாய் அவள்

அந்தி வேளையில்

வான் முகட்டில் வெண்ணிலா

ஆதவன் மறைய

விண்மீன் துளிர

வானவில் சேர்ந்த

இரம்யமான மாலைப் பொழுது முடிய

என் அருகே தேவதை வீற்றிருக்கும்

இரகசிய ராத்திரியை அறியேன்

என் நெஞ்சு படபடக்க

ஓரக் கண்ணால் அவளைப் பார்க்க

தேவதையோ மெல்ல நடைபோட

அவள் பாத அச்சுகளில்

என் பாதங்கள் பதித்து

மெய் மறந்து பின்தொடர

சில்லென வீசும் காற்றில்

மேனி சிலிர்த்து ஆசைகள் மலர

அவளின் கார்த்திகை பூ சந்திரகம்

என் மீது வாசமாய்ப் படர

உணர்வுகள் பொங்க ஆனந்தமே!...

அவள் நடைத் தொடர

யானும் தொடர்ந்தேன் பக்கவாட்டில்

சிற்பியின் செதுக்கலில் குறையில்லை

காதில் கன்னப்பூ குலுங்க

கண்ணின் இமை மினுமினுக்க

மூக்கு மேட்டில் மொட்டு ஜோலிக்க

இதழின் கடையில் மச்சம் எழில் சேர்க்க

பிரமன் படைத்தது பின் அவனே

வியர்ந்து பார்த்த அழகி இவள்தானோ?

யான் ரசிப்பது வானவன் விரும்பவில்லை

சிணுங்குகிறான் சாரல் மழையாய்

உடன் அவளும் சிணுங்க

என் பார்வையோ துருவம் மாறியது

நெஞ்சுக்குள் ஆசைகள் பெருகி ஆர்வம் கூட

அவளின் ஏறிடல் பார்வையில்

உச்சி முதல் பாதம் வரை நடுக்கம்

சிந்தையில் எண்ணங்களுக்குத் தடையிட்டு

இரத்த நாளங்களில் மாற்றம் செய்து

என் உயிரோட்டம் நிறுத்தியது-மீண்டும்

மெல்லிய கண் சிமிட்டலில்

தேகத்தில் இடி,மின்னல் அடிக்க

உயிர் கொடுத்தால் தேவதை...

தூரல் மழையில் நனைந்து

அவளை நோக்கிப் பின்செல்ல

அவள் என்னை நோக்கி முன் வந்தால்

நிலவொளியில் தேகம் மிளிர

நெற்றியில் குங்குமமிட்ட தமிழச்சின்

ஒரு கண் இமையிலே சிறு கீற்றுத் தழும்பு

தாமரை இலையின் துளி நீராய்

இதழ் மீது மழைத் துளி

அவள் முத்துக்கள் வெளிச்சிட

பெளர்ணமியும் தோற்றிட

நானோ கண்ணக்குழி அழகில் சொக்கினேன்

என்ன புலம்பினாலும்,எவ்வளவு கிறுக்கினாலும்

தேவதையின் திருமேனியோ எழுதப்படா காவியம்

விழிகளின் பார்வைகள் மோத

என் நடையோ தளர்ந்தன

அவள் என் அருகே வந்தால்

இருவர் மூச்சுக்காற்றும் சங்கமிக்க

என் இதய ஓசைகள் அவளுள் கேட்க

அவள் இதய ஓசைகள் என்னுள் கேட்டன

என்னை அவள் கடந்து செல்ல

கைகள் ஒன்றோடு ஒன்று உரச

ஆண்டுகள் ஆயிரம் இணைந்து வாழ்ந்த

எண்ணங்கள் அலையாய் பாய்ந்தன உள்ளங்களில்

தேவதையோ செல்கிறாள் எனக்கோ தயக்கம்

சொல்ல நினைத்த வார்த்தைகள் வராமல்

தீக்கு,திணறி நின்றேன்-ஆனால்

விழிகள் மீறிய செயல் நிகழ்ந்தன

அவளோ என்னை அழைத்தால்

கரம் பற்றிக் காதல் நதிக்கரைக்குச் சென்றாள்

மடிச் சாய்ந்து தன் ஆசைகள் சொல்ல

என் கண்ணிலோ...ஆனந்தம்,நீராய் வழிந்தன

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (26-Jul-16, 6:08 am)
பார்வை : 366

மேலே