இதய வடிவில் நம் காதல்தேசம்
எந்நேரமும்
காவல் காக்கும்
ஆசைக்கண்கள்,
எதையோ
முணுமுணுத்து
எப்போதும்
அவல் மெள்ளும்
அலைவரிசைகளில்
காதல் கீதங்கள்.!
இதய வடிவில்
நம் காதல்தேசம்
நரம்புகளால்
எல்லைக்கோடுகள்
நாளக்குருதியே
தேசிய நதி
மாறன் அம்புகள்
தேசியக் கொடி
நாகரிகமான
நளினத்தில்
நங்கூரமிடும்
எங்கள் காதல்
தேசீயம்..!!

