சிரிப்பு
ஒவ்வொரு உதட்டில்
உதிக்கும் சிரிப்பின் ஆழத்தில்
புதைந்து கிடக்கும்
சோகங்கள்...துன்பங்கள்
ஆயிரம் ...ஆயிரம் ..
காலதேவனின்
கருணையினால்
மறதியின்
மாயத்தால்
சிரிக்கின்றோம்
பிரிவுகளை இதயத்தில்
இறுக்கிக்கொண்டு ..
கவலைகளை இரத்தத்தில்
கறைத்துக்கொண்டு....
சிரிக்கின்றோம்...
உதிர்ந்த மலரை
கண்டு மடிவதில்லை
செடி...
வற்றிய நீரை
கண்டு வாடுவதில்லை
ஆறு ....
வருவதும்
பிரிவதும்
பிறப்பதும்
இறப்பதும்
இயற்கையின் நியதி
அதை புரிந்த
மனதில் இல்லை
என்றும் வியாதி...
சிரிப்பு என்ற ஒற்றை
சொல்லே துன்பங்களின்
மருந்து
மறதியும் ...
மன்னிப்பும் இறைவன்
மனிதனுக்கு அளித்த
விருந்து...
இறைவன் அளித்த
விருந்துண்டு
சிரிப்பு என்ற
மருந்தை என்றும்
நமது மந்திரமாக்கிகொள்வோம்....
என்றும் என்றென்றும்

