இருளாய் என் இமை விழி

என்னில் எழுந்த எண்ணங்களை...
எழுத்துக்களில் நான் தந்திட...
பூத்திடும் வார்த்தைகள்...
பலர் மனதையும் வதைத்திடுமா...
வகை தெரியாமல் தவிக்கிறேன்...
தவித்தாலும் என் மனம்...
தாக்கமாய் வருகிறது...
என் தமிழின் ஏக்கமாய்...
என் மக்களின் மனமெல்லாம்...
பட்டுப்போனதா என...
என்னையறியாமல் என்னுள்...
பல கேள்விகள்....
பதிலாய் என்று மாறிடும்...
என் சுற்றங்களின் நினைவுகள்...
இருள் விலகிட காத்திருக்கிறேன்...
இமை மூடாமல் என்றும்...

எழுதியவர் : (28-Jul-16, 9:20 am)
பார்வை : 85

மேலே