கண்ணீரில் என் கனவு நாயகா

எண்ணமெல்லாம் என்னை தட்டிவிட....
தங்க தமிழில் நானும் தவிக்கிறேன்.
என் மக்களின் அன்பை எப்படி சொல்ல...
நேற்றிரவு முதல்...
இன்றிரவு வரை...
எத்தனை நினைவில் அன்பின் பிரதிப்பலிப்பு...
எங்கே போனது இந்த எதிரொளிப்பு இத்தனை நாளாய்...
முகநூலில் அனைவரின் பிம்பமும் மாறிட..
முதல் குடிமகனின் உருவத்தை பார்த்திட...
உணர்வெல்லாம் உயிரற்று போனது..
அக்னி தந்தவரின் சொல்லை..
அனைவரும் மாறி மாறி பதிவிட..
அகிலமே அதிர்ந்து நிற்க..
அசையாமல் நின்றது என் விழி..
அடக்காமல் கேட்கிறேன் உங்களிடம்..
ஏவுகணையின் மன்னன் அவர்..
மறைந்த சில நாளிலே...
மறந்து போனது ஏனோ !
விழி மூடியதும் ஒன்று சேர்ந்த உள்ளங்களே....
அதன் பின் எங்கே போனது உணர்வுகள்...
பாலைவன மண்ணில் அணு விதைத்தவரை...
ராமேஸ்வர மண்ணில் விதைத்து விட்டோம்..
இளைஞர்களின் மனதில் கனவு கோட்டை கட்டியவர்க்கு...
இன்று வரை நம்மால் நினைவு கோட்டை எழுப்பிட முடியவில்லை...
என்ன செய்ய...
என் மக்களுக்கு அவசியமில்லையோ....
இல்லை...
அத்தியாவசியமாய் மாறிய சினிமாவும், மதுவுமா..
என்..
அக்னி சிறகு நாயகரின் சிறகு பூட்டப்பட்டதா...
குரல் கொடுத்திட எவருமில்லை..
உன் குரல் ஒளித்த சொல்லை..
பரப்பி பெருமை பெற்றிட ஆளுண்டு...
என்ன செய்ய புரியவில்லை..
இந்த எந்திர உலகில்..
எம் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்...
உங்கள் சொல்லை...
உங்கள் கனவை...
உங்கள் நினைவை...
உங்கள் நினைவு நாள்...
உங்கள் பிறந்த நாள்..
இவ்விரண்டு நாள் மட்டும் பிரதிப்பலிக்கும்..
இரட்டை மனம் கொண்ட மக்கள் மத்தியில் நானும் வாழ்கிறேன் மந்தமாய்....
கண்ணீரில் என் கனவு நாயகா...

எழுதியவர் : (28-Jul-16, 9:21 am)
பார்வை : 85

மேலே