ஒரு தலை காதல்

ஆணாக இருந்தாலும்
அவளிடம் சொல்லாத காதலை
என் இதயத்தில் சுமப்பதால்
நானும் ஒரு தாய் தான்
என் ஒரு தலை காதலுக்கு !

எத்தனை முறை முனுமுனுத்தாலும்
என்றும் புதிதாய் தெரிந்தது
பொருள் நிறைந்த அவளின்
பெயர் எனக்கு !

அவள் பார்வையால் ஏற்பட்ட
இதய காயத்திற்கு மருந்து
தேடி அலைகிறேன் அவள்
பின்னால் புரியாத பலர்
பொறுக்கி என்கிறார்கள் என்னை !

மூச்சி விடாமல் கூட
பேசுவேன் அன்று
மூர்ச்சையாகி போகிறேன் இன்று
என் முன் அவள் வந்ததால் !

மற்றவர்களுக்கோ இரைச்சல் சத்தம்
எனக்கோ ரிதமான ஓசை
அவள் காலணியிலிருந்து வரும் ஓசை
அவோசை வெகு தூரத்தில்
இருந்து வந்தாலும் கூறிடுவேன்
என் நண்பனிடம் வருபவள் என்னவள்
நண்பா என்று !

அவள் என்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும் கவனித்தும்
விடாமல் நச்சரிக்கிறேன் என்
சகாக்களை மச்சான் அவள்
என்னை பார்த்தலா இல்லையா
என்று !

அவள் என்னை ஒரு
முறை பார்த்தால் போதும்
எனக்குள் ஏற்படும்
மாற்றங்களை யாரிடமும் பகிற
முடியாத எனக்குள்ளே
கிடக்கும்
நினைவுகளின்
சின்னம் அது !

கன்னிதீவு போல் தொடர
கூடாது என் காதல் என
கட்டளையிட்டேன் என் கால்களுக்கு
செல் அவளிடம் என்றேன்
கால்களோ நடுக்கத்தில் நகர்ந்து
வேறு திசையில் சென்றது
முடியாது என்று கூறி !

இன்னும் மறைத்து வைத்திருக்கிறேன்
இனிமையான என் காதலை
அவளிடம் சொல்லாமல் !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (29-Jul-16, 8:27 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 3669

மேலே