மனைவி எனும் தாய்

பிரபஞ்சக் குடிலின்
புரியாத
அடித்தளம்

வாழ்க்கைப்
பயணத்தின்
வழித்துணை

உறவுகளைப்
பேணும்
பெட்டகம்

இன்ப துன்பத்தை
ஏற்கும்
பங்காளி.

உருகிஉருகி
ஒளிகொடுக்கும்
மெழுகு

தனியாய் வந்து
துணையாய் வாழும்
தாய்

எல்லோர் வாழ்விலும்
பின்னால்
இருப்பவள்

நீங்கள் அல்லும்
பகலும் பார்க்கும்
கண்ணாடி

கணவன் எனக்
கண்ணில் சுமந்நது
தந்தை என்ற
தரத்தைத் தந்தவள்

அருமை நிறைந்த
மனைவியை நேசியுங்கள்
அன்பெனும் பாடத்தை
அவளிடம் வாசியுங்கள்

எழுதியவர் : சிவநாதன் (30-Jul-16, 7:42 am)
Tanglish : manaivi yenum thaay
பார்வை : 7720

மேலே