சூலையும் ஆகத்தும்

ஆகஸ்ட் முதல் ஞாயிறை
ஏன் நண்பர்கள் தினமாக கொண்டாட வேண்டும்

அது ஜனவரியாகவோ
பிப்ரவரியாகவோ
மார்ச் ஆகவோ
பிற ஏதாவது ஒரு மாதமாகவோ
இருந்துவிட்டு போக வேண்டியது தானே
ஏன் ஆகஸ்ட்??

எந்த மாதத்திற்கும்
இல்லாத சிறப்பொன்று
ஆகத்துக்கு இருக்கிறது

ஆம்
ஆங்கில மாதங்களில்
பிற எந்த மாதங்களிலும்
தொடர்ந்து 31 நாட்கள் வராது
ஆனால் அதை முறியடித்தது
இந்த ஜூலையும்
ஆகஸ்ட்டும்

இந்த இரு நண்பர்களின்
நட்பின் ஆழம் இதிலிருந்தே தெரிகிறதே.....


ஊர் சம்பிரதாயத்திற்கு
நாட்களை நகர்த்தும் பொழுது
பழைய (பழைய வேறு பழமை வேறு
பழைய என்பது முறையானது இல்லை
(சரியானது இல்லை என்றாலும் அவன் செய்கிறான் நானும் செய்வேன் என்பது) என்றாலும் பின்பற்றுவது
பழமை என்பது முறையானது.
கலாச்சாரம் பண்பாடு நம் உயிர் போன்றது அதை பின்பற்றுவது நம் கடமை
அத்தியாவசியமானது.
வாசலில் சாணி தெளிக்க வேண்டுமென்றால் தெளிக்க வேண்டும்.

எவனோ ஒரு ஆதிமனிதன் சொல்லிவிட்டு போய்விட்டான்.
அவனுக்கு என்ன தெரியும்.
நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா.
அது எல்லாம் அழுக்கு என்று சொல்கிறாய்.
அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்திருக்கிறார்கள் இன்று
நோய் கிருமிகள் தொற்றாமல் இருப்பதற்கு சிறந்த வழி இதுவென்று
இதுமட்டுமில்லாமல்
மாவிலை தோரணம் கட்டுவது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் வெளியே செல்லும் பொழுது தலையில் வேப்பிலையை சொருகிக் கொண்டு செல்வது இது போல் பலவும் நம் உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்மை பயப்பதென்று நாம் ஆராய்ந்து தெரிந்ததை கணினி இல்லாத காலத்திலேயே அறிந்த நம் முப்பாட்டனல்லவா அறிவாளி.எதுவும் வாய்வார்த்தை அல்ல எல்லாவற்றிற்கும் பின்
மிகப் பெரிய பெரிய அறிவியல் வாழ்கிறது. அதை பின்பற்ற தவறினால் தங்களை விட தலையாட்டி பொம்மை , பழைய பஞ்சாங்கம் வேறெதுவும் இல்லை)
பஞ்சாங்கத்தை எல்லாம் தகர்த்தெறிந்து
புது வேதம் படைத்தது

ஆம் நீயும் நானும் சரிசமம்
எல்லோரையும் போல் அல்ல
நாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்
7 8 என்று வாழ்கிறோம்
ஏழிசையும்
எட்டு திசையில்
(எங்கே என்று அறிய முடியா ஆனால் உணர முடிந்த)
காற்றில்
(எல்லா இடங்களிலும்)
சங்கமித்திருப்பது போல்
எங்கே நாங்கள் இருந்தாலும்
உயிரின்
சுவாசமதில்
எல்லா இடங்களிலும்
வாழ்ந்துகொண்டே இருக்கும்
எங்கள் நட்பு


எது நல்லதோ அதை செய்கிறோம்
(எல்லோரும் சொல்கிறார்கள்
இது தான் வழக்கம்
என்று செய்யமாட்டோம்.
எங்களுக்கு எது சரியென்று படுகிறதோ! அதை செய்கிறோம்
யாருக்கும்
தொல்லை தராமல்)

நீயும் நானும்
வேறு வேறு தான்
உயிரில் ஒன்றே
மனதில் என்றும்
நீயே
உனக்கே நானே
உயிரை தருவேன்
உன்னை கேட்காமல்
யாவையும் தருவேன்
உன்னை உயர்த்தி தோளில் வைத்து மகிழ்ச்சியடைவேன்
உனக்கும் எனக்கும்
வித்தியாசம் எதுவும் இல்லை
உருவத்தை தவிர

இரு உடல்கள்
ஓருயிர் ஆவது காதல்

இரு மனங்கள்
ஒன்று போல் யோசிப்பது நட்பு

நட்பு என்பது
வெறும் வார்த்தை
என்றால்(என்று தாங்கள் சொன்னால்)
அந்த வார்த்தைக்கு
நாங்கள் எழுத்தாகிறோம்
ஏனெனில்
அது தான்
எங்கள் வாழ்க்கை

நட்பு என்பது
உயிர் என்றால்
அந்த உயிருக்கு
உயிரை தருகிறோம்
எங்கள் உயிரையும் சேர்த்து

நட்பு என்பது
சுவாசம் என்றால்
நான் சுவாசிப்பதை
நிறுத்திவிடுகிறேன்
என் சுவாசத்தையும்
சேர்த்து எடுத்துக்கொள்

நீ மண்ணில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்
அதற்காக நான்
விண்ணில்(மண்ணில்)போனாலும்
கவலைபடமாட்டேன்
தோழியே
அதான்
என்னுயிர்
நீ வாழ்கிறாயே

நட்பை நேசிக்கிறேன்
உன்னை சுவாசிக்கிறேன்
சுவாசிப்பது நின்றதென்றால்
உன் தோழி
அவள் இல்லை
உலகில்

தோழியே
என் உயிர்
உன்மடியில்
போகவேண்டும்
உன்னை கடைசிவரை
நான் பார்த்துக்கொண்டே
இறக்க வேண்டும்
நிறைவேற்றுவாயா?!

~ உன் தோழி
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Jul-16, 4:41 pm)
பார்வை : 187

மேலே