எதிலிருந்து தொடங்கலாம் சொல்

எதிலிருந்து தொடங்கலாம் சொல்
================================

அவன் : நமக்குள்ள ஏன் பேச்சு குறைந்து போனது ம்ம் ,,,
அவள் : அப்போவே அதிகம் பேசிவிட்டோமோ ம்ம்
அவன் : நாம் மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாமா ,,
அவள் : எதிலிருந்து தொடங்கலாம் ,,
உன் பிறந்த நாளில் உன்னைப் பிடித்திருப்பதாக
வெக்கம் பூத்து சொன்னதிலிருந்தா
என்னிடம் பேச நீ தொடங்கிய
நகைச்சுவையிலிருந்தா
உனக்காக அவளிடம் தூது போனதிலிருந்தா
நீ என்னை விரட்டியதிலிருந்தா
புகைப்படத்தில் உன் கண்களைக் கண்டு
கிறங்கியதிலிருந்தா
நம் முதல் முதல் அலைப்பேசி
அழைப்புகளின்போது
உண்டான நடுக்கத்திலிருந்தா
நீ முதல் முறை என் செவிகளில் இசைத்த
அந்த பாடலிலிருந்தா
மல்லிகை உதிர்ந்த என் முதுகின் மேல்
நீ விரல்நுனி தீண்டயபோது
என் கன்னங்கள்
ரோஜா பிரசவித்ததே
அந்த தருணத்திலிருந்தா
அதிக அன்பினால் நீ என்னை
யாரோடும் பேச அனுமதிக்காமல்
இருந்ததிலிருந்து
மன்னிப்புக் கேட்டு மீண்டும்
என்னை துன்புறுத்தியத்திலிருந்தா
நீ எது செய்தபோதும் உன்னை மன்னிப்பேன்
என்பதை அறியும் நீ
உலகத்திலேயே யாரைவிடவும்
என்னை அதிகம் நேசிக்கிறாய்
என்று நான் அறிந்ததிலிருந்தா
இல்லை இதோ சற்று முன்னால்
நம் இருவருக்குமிடையே
நிகழ்ந்து முடிந்தேறிய
ஆழ்ந்த மௌனத்திலிருந்தா
இதோ இன்னொரு தற்கொலைக்கு
என்னை தயார் செயகிறேன்
எதிலிருந்து தொடங்கலாம் சொல் ம்ம்ம்ம்

அவன் : எது நிகழ்ந்திருந்தாலும்
உனக்குள்ளும் எனக்குள்ளுந்தானே
இனி நமக்குள் நாம்
புதிதாக பிறக்கலாம் வா
ஆடையவிழ்த்த குழந்தைகளாகி
மயக்கத்தில் மறந்த தழுவலில்
பெரியவர்களாகலாம் வா ம்ம்ம்

இப்படிக்கு

அவன் : "பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (2-Aug-16, 9:04 pm)
பார்வை : 216

மேலே