தமிழனின் பெருமை
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 / 2016 அன்று சிறப்பு இசை நிகழ்ச்சியை ஐ.நா. சபையில் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார்.
ரகுமானின் பாடல் களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர்.
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.
இந்த இரு சிறப்புகளையும் பெற்றவர்கள் தமிழர்களே.
#தமிழ்வாழ்கவளர்க__செந்தமிழ்நாடென்னும்போதினிலே__இன்பத்தேன்வந்துபாயுதுஉயிரினிலே__