அரைகுறை கவி

இயற்கை இன்றி வர்ணிக்க கிளையும் இல்லை
காதல் இன்றி பயணிக்க வழியும் இல்லை

மொழியில் பட்டதாரியும் இல்லை
காதலால் கெட்ட தாடியும் இல்லை

எதுகை மோனையுமே அறிந்த நடை
எளிய வர்ணனைக்கு போட்டதில்லை தடை

பாரதியாரும் கண்ணதாசனும் கவிதை குருக்கள்
பள்ளி பருவ மொழி ஞானமே கவிதை கருக்கள்

இரவின் நிசப்தம் கவிதை உதிக்கும் கூடாரம்
தனிமையின் சிந்தனை காகிதங்களின் சேதாரம்

எழுதி வைத்த நாட்குறிப்பே முதல் கவிதை புத்தகம்
வானில் ஒளிவீசும் வெண்ணிலவே முதல் கற்பனை பெட்டகம்

நட்பு வட்டாரமே கவிதையை மெருகேற்றும்
நால்வரின் நல்வாழ்த்துக்களே அரங்கேற்றம்

பட்டங்கள் மீது மோகம் வந்ததில்லை
கை தட்டல்கள் மீது தாகம் குறைந்ததில்லை

பக்கங்களை குறைவாக நிரப்பினாலும்
பக்கத்தில் இருப்பவர்களின் மணவாளனே
அரைகுறை கவி...!

எழுதியவர் : (3-Aug-16, 7:13 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : araikurai kavi
பார்வை : 78

மேலே