நட்பு - குமார்

நட்பு
இந்த பூ மணத்தைத் தருவதல்ல
மனத்தைத்தருவது

கொடியில் பூப்பதல்ல
நண்பன் மடியில் பூப்பது

பெண்ணுக்கு கற்பு
ஆணுக்கு நட்பு

இது மனக் கதவின் திறப்பு
பெண்ணுக்கும் ஆணுக்கும்
இதுவே சிறப்பு

நட்பு
இந்தப் பூ
கூந்தலில் சூடுவதல்ல
கூட்டமாய்க் கூடுவது
அன்பினைத் தேடுவது
அரவணை நாடுவது

இது சூல் கொடுக்கும் பூவல்ல
துயரில் தோள் கொடுக்கும் பூ

இது தாள் எடுக்கும் பூவல்ல
தோழனுக்காக வாள் எடுக்கும் பூ
அதுதான் நட்பு

பனியோடு நட்பு
புள்ளிற்கு
கனியோடு நட்பு
பூவிற்கு

சனியோடு நட்பு
வெள்ளிக்கு
மணியோடு நட்பு
பள்ளிக்கு

மலையோடு நட்பு
முகிலுக்கு
கலையோடு நட்பு
மூங்கிலுக்கு

சிலையோடு நட்பு
சிற்பிக்கு
வலையோடு நட்பு
சிப்பிக்கு

இரவோடு நட்பு
நிலவிற்கு
பகலோடு நட்பு
பகலவனிற்கு

உறவோடு நட்பு
உலகிற்கு
உணர்வோடு நட்பு
நண்பனுக்கு

உலகினில் உன்னதப்பூ நட்பு
அதைப் போற்றாவிடில்
அது உன் தப்பு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : குமார் (7-Aug-16, 8:30 pm)
பார்வை : 426

மேலே