கல்லூரியே
நித்தம் நித்தம் உள்ளம்
செழிக்க பல
நிகழ்வுகளை அள்ளி தந்த
என் நினைவுகளின் பெட்டகமே
என் கல்லூரியே என்
சொல்வேன் உனை பற்றி
நான் .....
முகம் தெரியாத ஒருவனை
என் உயிரில் கலந்த
என் உயிர் நண்பனாய்
முகவரி தந்தாய்
என் வாழ்க்கையின் மற்றொரு
நண்பனாய் நீ ......
உன் வகுப்பறை எனும்
கருவரையில் பத்து மாதங்கள்
அல்ல முப்பத்தாறு மாதங்கள்
சுமந்தாய் தாய் அன்போடு
நீ என்னை .........
என் தாய் மகிழ
என் தந்தை மகிழ
என் உறவுகள் மகிழ
கல்வியில் சிறந்தவனாய்
பண்பில் சிறந்தவனாய்
எனை மாற்ற
மற்றொரு தாயை தந்தையை
எனக்களித்தாயே ஆசான் எனும்
பெயரில் நீ ......
இன்பம் கண்ட என்
இருதயம் ஒரு பொழுதும்
இன்னல்களை கொண்டு
கண்ணீர்களை கண்டதில்லை
இறைவன் மீது ஆணையாய்....
சாதி சமயம் உடைத்து
உயர்வு தாழ்வு ஒழிந்து
மாமன் மச்சான் என்றும்
அண்ணன் தங்கை என்றும்
ஒரு சேர கிடந்தோம்
நட்பின் பிள்ளையாய் உன்
மடியில் '''''''
என் உயிர் பிரிந்தது போல்
எண்ணம் கொண்டேன் உனை
விட்டு நான் பிரியும் பொழுது
என் கல்லூரியே அதற்கு
என் கண்ணீர் சாட்ச்சி ..........