ஒரு கவிதையின் டைரி

எடுத்து….எடுத்து…எடுத்து
பலமுறைப் படித்ததில்…..
இறுமாந்தன அந்த கவிதை
”தான்தான்” சிறந்ததென்றே!
அரங்கொன்றில் அரங்கேற்றினான்
அந்த கவிதையை ! கவிஞன்
பலத்த கைத்தட்டல்கள்
கவிஞனுக்கா? தமக்கா?
குழப்பமோ…குழப்பம்!
அந்த கவிதைக்கு!
கைத்தட்டல்களுக்கு பின்னே
அநேக அறிவுஜீவிகள்
அலசி….அலசி….ஆராய்ந்து
ஆய்ந்து…ஆய்ந்ததில்…..
மூச்சு முட்டியது
அந்த கவிதைக்கு!
கவிஞனின் காதோரம்!
கிசுகிசுத்தது….. அந்த கவிதை!
” சாதாரண கவிதை” தானன்றே”
----கே. அசோகன்.