வலிக்கிறதே என் வாழ்க்கை மொத்தமும்

இதற்கு பிறகு இல்லை
என்ற இந்த நாள்
வலிக்கவில்லை
நாட்காட்டியை கிழிக்கும் போது ....

இதற்கு பிறகு
இல்லை என்ற
இந்த நிமிடம்
வலிக்கவில்லை
கடிகாரம் காணும் போது ...

இதற்கு பிறகு
இல்லை இந்த மழை
வலிக்கவில்லை
மழையில் நனையும் போது...

இதற்கு பிறகு
இல்லை இந்த
அலை வலிக்கவில்லை
எனை தொட்டு விட்டு
நகரும் போது .....

இதற்கு பிறகு
இல்லை இந்த
தென்றல்
வலிக்கவில்லை
எனை தீண்டி விட்டு
செல்லும் போது ....

இதற்கு பிறகு
இல்லை இந்த நீ
இது மட்டும்
வலிக்கிறதே ....
என் வாழ்க்கை மொத்தமும் .....

எழுதியவர் : கிரிஜா.தி (8-Aug-16, 9:37 pm)
பார்வை : 76

மேலே