கனவு தேவதை

என் காதல்
தந்த ஓவியமே-நீ
அசைந்திடும் முப்பரிமாண காவியமே...!

அழகுக்குப் பிறந்தவளே
அனிச்சையாய் எனை
ஆட்டிப் படைத்தவளே...!

என் கனவில் வந்த
கற்பனையே
அது முதலே
நான் உனக்கு அற்பனையே...!

காட்சியோடு தேவதையே
வரமும் கூட தந்துவிடு
ஆகிடுவேன் நானும்
உந்தன் பாதுகையே...!

என் விழிகளையே உளியாக்கி
தண்ணீரிலும் உனைச்
செதுக்கி சிற்பமாய்
நான் வடிப்பேன்...!

காற்றைக் கூடச்
சேகரித்து உன் உருவத்தை கலையாது அதில்
பொதிப்பேன்...!

மேகத்தைச் சிறை பிடித்து
ஊசியிலே அதை நுழத்து
வெண்ணிற ஆடையுனக்கு செய்திடுவேன்...!

விண்மீன்களைக் களவாடி
என் உயிரிலே அதைக் கோர்த்து
அணிகலனாய் உனக்கு அணிந்திடுவேன்...!

என் சிந்தனையைக் கிளறியச் சித்திரமே...!

பெண்ணினத்தில்
புதுமையாய்
உனைப் பார்த்துத் திளைக்கின்றேன்...!

நித்திரையில்
குழப்பமாய்
நடு யாமத்தில்
தவிக்கிறேன்...!

இவள்
பிரம்மன் படைத்த
நிலவின் சிதறி
விழுந்த சிறு துகளா?

இல்லை
அவன் அழகுக்கு
வரைந்த புனையின்
அச்சு நகலா?

எழுதியவர் : ராஜ் சரண் (8-Aug-16, 11:45 pm)
சேர்த்தது : ராஜ் சரண்
Tanglish : kanavu thevathai
பார்வை : 1175

மேலே