காதலியே

சிலந்தி வலையில்
சிக்கி தவிக்கும்
சிறு பூச்சியாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் பார்வையால்
என் மேல் விழுந்த
காதல் வலையில் ,

தேன் முகம் காணாது
தேடி தேடி தவிக்கிறேன்
கன்னித்தீவில் தொலைக்கப்பட்ட
காதலியாய் உன்னை நான் ,

தேகம் எங்கும் சிலிர்க்கும்
தேன் மழை பொழியும்
உடல் முழுதும் வியர்க்கும்
உலக சாதனை புரிந்தது போல்
உணரும் என் மனம்
உனை காணும் அந்த
ஒரு நொடி ,

என் கால்கள் மட்டும்
தான் தள்ளி போய்
நிற்கின்றது உனை விட்டு
என் பார்வையும்
என் மனமும்
என்றும் அகலாது
உனை விட்டு ஒரு
போதும் கண்ணே ,

எனை உதைத்து தள்ளிய பின்னும்
என்னுயிர் நீ என
உன் பின்னே சுற்றிய
நான்
உதறி தள்ள மாட்டடேன்
உன்னை
ஒரு போதும் என் காதலியே !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (8-Aug-16, 9:29 pm)
Tanglish : kathaliye
பார்வை : 220

மேலே